ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி என்பது வரும். இது சங்கடங்களை நீக்கக்கூடிய சதுர்த்தியாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கி அருள் புரிந்ததால் அன்றைய தினம் நாம் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களையும் விநாயகப் பெருமான் நீக்குவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் வரும் பொழுது அதற்கு சக்திகள் பல மடங்கு அதிகமாகவே இருக்கும். அதனால் வருடம் முழுவதும் வணங்காமல் இருப்பவர்கள் கூட இந்த மகா சங்கர சதுர்த்தியை தவறாமல் வழிப்பட வேண்டும். அப்படி நாம் மகா சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று வழிபடும் பொழுது நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் எந்த பொருளை கையில் வைத்துக் கொண்டு வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விநாயகப் பெருமானுக்கு உரிய திதியான சதுர்த்தி திதி தேய்பிறையில் வரும் பொழுது அதை நாம் மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் நாம் விநாயகர் பெருமானை தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் இருக்க இயன்றவர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். உடல் நலம் காரணமாக விரதம் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு பால் பழங்களை சாப்பிட்டுக் கொண்டோ அல்லது ஒரு வேலை உணவை மட்டும் எடுத்துக் கொண்டோ விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.
இப்படி நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலையை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. வீட்டிலேயே வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அருகம்புல்லை வாங்கி வைத்து விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். இந்த வருடம் வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாள் என்பது ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் மாலை 6:15க்கு மேல் தான் சதுர்த்தி திதி ஆரம்பிக்கிறது என்பதால் அன்றைய தினம் 6:15க்கு மேல் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்து அவரை வழிபாடு செய்ய வேண்டும்.
அவரை வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல்களை நாம் முன் வைப்போம். அப்படி வேண்டுதல்களை முன் வைக்கும் பொழுது நம்முடைய கையில் ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்துக்கொண்டு அந்த வேண்டுதலை முன்வைக்க வேண்டும். அந்த பொருள் தான் குன்றின் மணி. சாதாரணமாக கிடைக்கக்கூடிய சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய குன்றின் மணியை வைத்து நாம் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த குன்றின் மணி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பொதுவாத்தமாக விநாயகரின் கண் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். இப்படி விநாயகரின் கண்ணாக இருக்கக்கூடிய குன்றின் மணியை நாம் கையில் வைத்துக்கொண்டு நம்முடைய பொருளாதார தொடர்பான பிரச்சனைகளோ, தோஷங்களோ சங்கடங்களோ தீர வேண்டும் என்று வேண்டினோம் என்றால் விநாயகப் பெருமானின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டு நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இப்படி குன்றின்மணியை கையில் வைத்து வழிபாடு செய்து விட்டு அந்த குன்றின்மணியை அப்படியே விநாயகரின் பாதத்தில் வைத்து விடுங்கள். விநாயகர் சதுர்த்தி வரும் சமயத்தில் வீட்டில் வைத்திருக்கும் விநாயகரை நீர் நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச் செல்வோம் அல்லவா? அப்பொழுது இந்த குன்றின்மணியையும் எடுத்துச் சென்று நீர்நிலையில் போட்டுவிட்டு வரவேண்டும்.
இதையும் படிக்கலாமே: புத்தி கூர்மையுடன் திகழ பரிகாரம்
மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய இந்த வழிபாட்டு முறையை நாமும் மகா சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று மேற்கொண்டு நாம் வேண்டிய வரத்தை விநாயகப் பெருமானிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.