ஒரே நாளில் உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் உங்கள் வசப்படுத்த இந்த சுவையான காலை உணவை சமைத்துக் கொடுத்து பாருங்கள்

omelet
- Advertisement -

பொதுவாக திருமணமாகி தனது கணவர் வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு, அந்த வீட்டில் யார் யாரிடம் எப்படி பழக வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பதே புரியாமல் இருக்கும். இப்படி பழகுவது என்பதே பிரச்சனையாக இருக்கும் பொழுது அவர்களுக்கு பிடித்த சமையலை எப்படி செய்து கொடுக்க முடியும். இவ்வாறு ஒரு பெண்ணுக்கு மிகுந்த சவாலாக இருப்பது அந்த வீட்டில் உள்ள அனைவரையும் தன்பக்கம் வரவழைப்பது தான். அதற்கு பெண்கள் கைவசம் வைத்திருக்கும் ஒரு ஆயுதம் அவர்களின் சமையல் மட்டும் தான். அவ்வாறு புதியதாக சமைக்கும் பெண்கள் கூட இந்த ஒரு சிம்பிளான டிஷ்ஷை செய்து கொடுத்தால் போதும். வீட்டில் உள்ள அனைவருமே இனி உங்கள் பக்கம் தான். வாருங்கள் இந்த காலை உணவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பெரிய உருளை கிழங்கு – 1, வெங்காயம் – 1, முட்டை – 1, பச்சை மிளகாய் – 2, தனியாத்தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கோதுமை மாவு – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, அதனை சுத்தமாக கழுவிக் கொண்டு, அதன் மேல் உள்ள தோலை முழுவதுமாக சீவி எடுக்க வேண்டும். பிறகு இந்த உருளைக்கிழங்கை கிரேட்டரில் வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் துருவிய உருளைக்கிழங்கு ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும்.

பிறகு ஒரு வெங்காயத்தை தோல் நீக்கி, அதனையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு அதே போல் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு தண்ணீரில் ஊற வைத்த உருளைக்கிழங்கை நன்றாக பிழிந்து இவற்றுடன் சேர்க்க வேண்டும். அதன்பின் இவற்றுடன் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் இவற்றுடன் 3 ஸ்பூன் கோதுமை மாவையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இறுதியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக பிசைந்து விட வேண்டும். இதில் தண்ணீர் ஏதும் சேர்க்க கூடாது. இவ்வாறு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்ட பின்னர், அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த கலவையில் இருந்து ஒரு கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி, தோசை மாதிரி சமன் செய்ய வேண்டும். பின்னர் இதனை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான காலை உணவு தயாராகிவிடும்.

- Advertisement -