பலமுறை முயற்சி செய்தும் தோல்வியடைந்த காரியத்தில் கூட, நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்த 1 பொருளை உங்களுடைய தலையை சுற்றி இப்படி தூக்கி எறிந்து விட்டு போனால், தோல்விக்கு துளியும் வாய்ப்பில்லை.

milagu

நம்முடைய வாழ்க்கையில் சீரான முன்னேற்றம் இருக்க வேண்டுமென்றால், வெற்றி நம் கையில் இருக்க வேண்டும். சில பேருக்கெல்லாம் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அது தோல்வியில் போய் முடியும். தோல்வி, துயரத்தை தான் கொடுக்கும். துயரம் துவண்டு போக வைக்கும். மனக்குழப்பம் வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாது. ஆக இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட சுலபமான ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sad

நீங்கள் நம்பினாலும் சரி, நம்பவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு பொருளை, இந்த எண்ணிக்கையில் உங்கள் இடது கையில் எடுத்து, உங்கள் தலையை சுற்றி இப்படி தூக்கி போட்டு பாருங்கள். உங்களை பிடித்த துரதிர்ஷ்டம் அந்தப் பொருளோடு பொசுங்கி விடும் என்பது தான் இந்த பரிகாரத்தின் அர்த்தம்.

அது எந்த பொருள். அதை எந்த முறைப்படி சுற்றி எறிய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா? நம்முடைய வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தும் மிளகு தான் அந்தப் பொருள். எப்படிப்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட இந்த மிளகுக்கு, எப்படிப்பட்ட கெடுதலையும் அழிக்கும் சக்தியும் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

milagu-deepam

இதற்கு உதாரணமாக பைரவருக்கு விளக்கு மிளகு தீபம் ஏற்றினால், நம்முடைய கஷ்டங்களும் கடனும் பொசுங்கிப் போகும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். உங்களுடைய வாழ்க்கையில் கண் திருஷ்டியால் பெரிய போராட்டங்களை சந்தித்து வருகிறீர்கள், என்பவர்கள் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம்.

- Advertisement -

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை. திருமணத்தடை உள்ளது. அல்லது தீராத நோய் பிரச்சனையால் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் கூட நிரந்தர தீர்வை கொடுக்க கூடிய சக்தி இந்த மிளகிற்கு உண்டு. எத்தனை முறை முயற்சி செய்தும், ஒரு விஷயத்தில் நீங்கள் தோல்வி அடைந்து இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து விட்டு, மீண்டும் அந்த முயற்சியை ஒரு முறை மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

Milagu benefits in Tamil

எந்தப் பிரச்சனையை நம் வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டும் என்றாலும், நாம் வீட்டை விட்டு நில வாசல்படியை தாண்டி வெளியில் சென்றுதான் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கின்றது. ஆக, நில வாசற்படியை தாண்டும் போதே நம்மிடம் இருக்கும் துரதிர்ஷ்டத்தை, நில வாசல்படியை தாண்டி வீட்டை விட்டு வெளியே வரும்போது பொசுக்கி விட வேண்டும்.

navagragham-1

சமையலறையில் இருந்து 9 மிளகை எடுத்து உங்களது இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். நில வாசலை தாண்டி, வெளியே வந்துவிடுங்கள். உங்களது தலையை நவகிரகங்களை நினைத்துக் கொண்டு, இடது கையில் வைத்திருக்கும் மிளகை 9 முறை சுற்றி, அந்த மிளகை நெருப்பில் போட்டு விட்டு, அதன் பின்பு எந்த காரியத்திற்கு வேண்டும் என்றாலும் செல்லலாம். சிறிய தூபக்காலில் ஒரு கொட்டாங்குச்சியை கொளுத்தி அந்த நெருப்பில், இந்த மிளகை போட்டாலும் போதும். நில வாசப்படிக்கு வெளியில் தான் இந்த மிளகை எரிக்க வேண்டும்.

neruppu

பரிகாரம் என்று பார்த்தால் சிறியது தான். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற, தடைகளைத் தகர்த்தெறிய வாழ்க்கையை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே செல்ல இந்த சிறு பரிகாரம் உங்களுக்கு பெரிய உதவி செய்யும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.