இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி உங்கள் காலடியில் கிடக்கும்! அவமானங்களையும், தோல்விகளையும் துரத்தியடிக்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

vijayalakshmi-temple

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும். கஷ்டங்களை தாங்கி கொள்ளும் நம் மனது தோல்விகளையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்வதை மறுக்கும் என்பது தான் உண்மை. இப்படி தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்தவர்கள் அதிலிருந்து வெற்றியை தன்வசம் ஆக்கிக் கொள்ள சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

vijaya-lakshmi1

ஜெயம் என்பது விஜயலட்சுமி கொடுக்கக்கூடிய ஒரு வரமாகும். அஷ்ட லட்சுமிகளில் வெற்றிகளை கொடுக்க கூடியவள் விஜயலட்சுமி. இவளின் அருட்பார்வை இல்லாமல் எந்த ஒரு செயலிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. எவரையும் வெற்றி கொள்ளும் தைரியம் பிறக்க விஜயலட்சுமியை வணங்குவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி இருக்கும் பொழுது இவளுடைய மந்திரத்தை உச்சரித்தால் வெற்றி அல்லாமல் வேறு என்ன வரும்?

ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம் :
அஷ்ட பாஹீயுதாம்தே வீம் ஸிம்ஹாசன
வரஸ்த்திதாம் சுகாஸநாம் சுகேசீம்ச கிரீட
மகுடோஜ்வலாம் ச்யாமாங்கீம் கோமளாகாரம்
சர்வாபரண பூஷிதாம் கட்கம் பாசம் ததா சக்ரம்

vijaya-lakshmi

அபயம் சவ்ய ஹஸ்தகே கேடகஞ் சாங்குசம்
சங்கம் வரதம் வாமஹஸ்தகே ராஜரூபதராம்
சக்திம் ப்ரபா செளந்தர்ய சோபிதாம் ஹம்சாரூடாம்
ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே!

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறி இருக்கும். ஒவ்வொரு வெற்றியையும் சந்திக்கும் பொழுது இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் எத்தகைய தடைகளும் நீங்கி வெற்றி உங்கள் வசம் வரும். உங்களின் முயற்சிகளும், முன்னேற்றங்களுக்கு தடைகளாக இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். நீங்கள் பூஜை செய்யக் கூடிய செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் மட்டுமல்லாமல் எல்லா தினமும் விஜயலட்சுமி மந்திரத்தை உச்சரித்தால் சிறு சிறு விஷயங்கள் முதல் மாபெரும் விஷயங்கள் வரை நீங்கள் வெற்றியை அடையலாம்.

om-mantra

நீங்கள் அரும்பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது உங்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் சிலருடைய கெடு பார்வைகளை அழிக்க விஜயலட்சுமி மந்திரம் உறுதியாக இருக்கும். வேலை தேடி பல இடங்களில் அலைந்து நிராகரிக்கப்பட்டு உள்ளவர்கள் இந்த மந்திரத்தை கூறும் பொழுது மனதிற்கு பிடித்த வேலை உடனடியாக அமையும். வெற்றியை அருகிலிருந்து பார்த்த நீங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல நழுவ விட்டுவிட்டீர்கள் என்றாலும் கூட இந்த மந்திரத்தை உச்சரித்தால் புது தன்னம்பிக்கை பிறக்கும்.

success

உங்களை ஏமாற்றியவர்கள், வீண்பழி சொல்பவர்கள், துரோகம் இழைத்தவர்கள், கபடம் ஆடியவர்கள் என்று எத்தகைய நேர்முக அல்லது மறைமுக எதிரிகளின் கெட்ட எண்ணங்களை வேரோடு அழிக்கக் கூடிய சக்தியும் இந்த மந்திரத்திற்கு உண்டு. நல்ல காரியங்களை துவங்கும் முன்பு இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு துவங்கி பாருங்கள்! அதில் வெற்றியாளர் நீங்களாக தான் இருக்கும்.