- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதோஷங்களை நீக்கி வெற்றிகளை தரும் கருட வழிபாடு

தோஷங்களை நீக்கி வெற்றிகளை தரும் கருட வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய சில தோஷங்கள் கூட காரணமாக அமையலாம். அப்படிப்பட்ட தோஷங்கள் எதுவாக இருந்தாலும் அந்த தோஷங்களை நீக்கி சகல செல்வங்களையும், சுபிக்சங்களையும் தரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் சனிக்கிழமையும், தசமி திதியும், சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளாக திகழ்கிறது. அந்த நாளில் செய்ய வேண்டிய கருட வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெற்றிகளை தரும் கருட வழிபாடு

சிவபெருமானுக்கு எப்படி நந்தி பகவான் சிறப்பு மிகுந்தவராக கருதப்படுகிறாரோ அதேபோல் தான் பெருமாளுக்கு கருடாழ்வார் சிறப்பு மிகுந்தவராக கருதப்படுகிறார். பெருமாளை வழிபாடு செய்வதற்கு முன்பாக கருடாழ்வாரை வழிபாடு செய்தால் தான் பெருமாளின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்று கூட கூறுவது உண்டு. அப்படிப்பட்ட கருடாழ்வாரை நாம் சாதாரணமாக வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும் என்றும், சுபிக்ஷம் உண்டாகும் என்றும், பிணிகள் விலகும் என்றும், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருடாழ்வார் வழிபாட்டை பெருமாளுக்குரிய சனிக்கிழமையும், நரசிம்மருக்குரிய சுவாதி நட்சத்திரமும், தசமி திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் செய்யும்பொழுது இதற்கு அளவில்லா பலன்கள் கிடைக்கும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளாக தான் ஜூலை மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை திகழ்கிறது. அன்றைய நாளில் மறவாமல் நாம் கருடாழ்வாரையோ அல்லது நரசிம்மரையோ வழிபாடு செய்ய வேண்டும். கருடாழ்வாரை வழிபாடு செய்வதன் மூலம் நாம் நினைத்தது நடக்கும், நமக்கு வெற்றிகள் உண்டாகும், சுபிக்ஷம் பெருகும், நம்மை பிடித்த பிணிகள் அனைத்தும் விலகும், தோஷங்கள் நீங்கும், செல்வங்கள் அனைத்தும் பெருகும் என்று கூறிக் கொண்டே செல்லலாம்.

அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது பெருமாளுக்கு துளசி மாலை வாங்கிக் கொண்டு செல்வது போலவே கருடாழ்வார்க்கும் துளசி மாலை வாங்கிக் கொள்ள வேண்டும். முதலில் கருடாழ்வாருக்கு துளசி மாலையை சாற்றி அவருக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது அவருக்குரிய மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை முழுமனதோடு தொடர்ச்சியாக 48 முறை கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி கூறி முடித்த பிறகு நம்முடைய வேண்டுதலை கருடாழ்வாரிடம் முன் வைக்க வேண்டும். பிறகு நாம் எப்பொழுதும் போல் பெருமாளை தரிசனம் செய்யலாம். அப்படி பெருமாளை தரிசனம் செய்யும் பொழுது முதலில் பெருமானின் பாதத்தை தரிசனம் செய்துவிட்டு பிறகு பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கருடாழ்வாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு பெருமாளின் அருளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை நாளைய தினம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நாளைய தினத்திலிருந்து தொடர்ச்சியாக 48 நாட்கள் தினமும் கருடாழ்வாரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் எந்த காரியத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த காரியம் விரைவிலேயே நடைபெறும். எப்பேர்ப்பட்ட வறுமையான சூழ்நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களின் வறுமை படிப்படியாக விலகி செல்வநிலை உயரும்.

மந்திரம்

“அரிஓம் றீம் கிலியும் சவ்வும் ஓம் கருடா வாவா ஓங்கார ஆங்கார ஓம் கருட பகவாய நம”

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் அணுகாமல் இருக்க

பெருமாள் வழிபாட்டை செய்யக்கூடியவர்கள் அனைவரும் மறவாமல் கருடாழ்வாரை வழிபாடு செய்ய வேண்டும். யாரொருவர் கருடாழ்வாரை வழிபாடு செய்துவிட்டு பிறகு பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பெருமாள் மற்றும் தாயாரின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்