நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏதாவது ஒரு முடிவை எடுப்போம். அந்த முடிவு நல்ல முடிவாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையும் நல்லவிதமாக மாறும். ஒரு வேளை தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்றால் அதனால் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேறு முடிவு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று யோசித்து வருத்தப்படவும் செய்வோம். அப்படி வாழ்க்கையை மாற்றக்கூடிய நல்ல முடிவை எடுப்பதற்கு நம்முடைய மனம் மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. என்னதான் மூளை அறிவுபூர்வமாக யோசித்து ஒரு முடிவை எடுத்தாலும் நம்முடைய மனமானது அதை மாற்றி வேறொரு முடிவை எடுக்க வைத்து விடும். அப்படிப்பட்ட மனதை தெளிவான முடிவை எடுக்க வைக்க செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வெற்றிக்கு மேல் வெற்றி பெற
மனம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக திகழக்கூடியவர் சந்திர பகவான் என்று நம் அனைவருக்குமே தெரியும். இவரை மனோகாரகன் என்று கூறுவதும் உண்டு. அப்படிப்பட்ட சந்திர பகவான் நம்முடைய ஜாதகத்தில் சிறப்பான முறையில் இருந்தால் கண்டிப்பாக முறையில் நாம் தெளிவான நல்ல முடிவை எடுப்போம். ஒரு வேளை அவர் வேறு ஏதாவது கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அதற்கேற்றார் போல் நம்முடைய முடிவானது மாறுபட்டு அதனால் நம்முடைய வாழ்க்கையே மோசமான நிலைக்கு சென்று விடும். அந்த மாதிரி தவறான முடிவை எடுக்கக்கூடிய நபர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
சந்திரனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு கடவுள் என்றால் அவர் விநாயகப் பெருமான்தான். விநாயகப் பெருமானுக்குரிய திதியான சதுர்த்தி திதி அன்று அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானிடம் நல்ல தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து “ஓம் கம் கணபதையே நமஹ” என்னும் மந்திரத்தை 133 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சந்திர பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
அடுத்ததாக சந்திர பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது திங்கட்கிழமை. திங்கட்கிழமை அன்று முழு நிலவு போல் பிரகாசமாக இருக்கக்கூடிய அம்பிகையின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு மூன்று அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு “ஓம் சக்தி பராசக்தி ஆதிசக்தி நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 90 முறை உச்சரித்து அம்பிகையை வழிபாடு செய்வதன் மூலமும் தெளிவான மனநிலையையும் முடிவையும் எடுக்க முடியும்.
கடைசியாக சந்திர பகவானுக்கு மிகவும் உகந்த தினமாக கருதக்கூடிய பௌர்ணமி தினத்தன்று செய்யவேண்டிய வழிபாட்டை தான் பார்க்க போகிறோம். இதற்காக நாம் ஒரு நெய்வேத்தியத்தை தயார் செய்ய வேண்டும். சந்திர பகவானுக்குரிய தானியமாக திகழ்வது பச்சரிசி. பச்சரிசியை வேகவைத்து அதனுடன் சுத்தமான தேன், கற்கண்டு இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
முழு நிலவு வானத்தில் தோன்றிய பிறகு இந்த பிரசாதத்தை நெய்வேத்தியமாக சந்திர பகவானுக்கு வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி சந்திர பகவானை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு அந்த நெய்வேத்தியத்தில் சிறிதளவை பிரசாதமாக நாம் எடுத்துக் கொண்டு மீதம் இருக்கக்கூடிய பிரசாதத்தை மற்றவர்களுக்கு தானமாக தரலாம் அல்லது பறவைகளுக்கு தானமாக தரலாம்.
இதையும் படிக்கலாமே:பண வரவை அதிகரிக்கும் மகாலட்சுமி மந்திரம்
இந்த முறையில் நாம் சந்திர பகவானுக்குரிய வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது சந்திர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நாம் இருக்கக்கூடிய முடிவுகள் நல்ல முடிவாகவும் தெளிவான முடிவாகவும் அதனால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.