- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றிலையின் காம்பை நீக்குவது ஏன்?

வெற்றிலையின் காம்பை நீக்குவது ஏன்?

- Advertisement -

பூஜைக்கு தாம்பூலமாக பயன்படுத்தப்படும் இந்த வெற்றிலை, பல மருத்துவ மூலிகை குணங்களையும் கொண்டுள்ளது. வெற்றிலை இல்லாத மங்கள காரியங்களும் இல்லை, வெற்றிலை மெல்லாத ஊராரும் ஒரு காலத்தில் இல்லை. இந்த மகத்துவமான வெற்றிலைக்கு விதைகள் எதுவும் கிடையாது. இதன் நரம்பு பகுதியை பதியம் செய்து தான் வளர்ப்பார்கள். வெற்றிலையை காம்பு நீக்கி விட்டு தான் சாப்பிட வேண்டுமா? ஆன்மீகமும், அறிவியலும் அதைப் பற்றி என்ன சொல்லுகிறது? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

வெற்றிலைக்கு பெயர் போன ஊர் கும்பகோணம். கும்பகோணம் வெற்றிலை என்றாலே தனி மவுசு தான். வெற்றிலை எல்லா விதமான சுபகாரியங்களுக்கும் தாம்பூலமாக பயன்படுத்துவார்கள். வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடும் பொழுது, அது பல்வேறு நன்மைகளை உடலுக்கு செய்கிறது ஆனால் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு எவ்வளவு சேர்க்க வேண்டும்? என்பதில் தான் சூட்சமமே ஒளிந்து கொண்டுள்ளது. நம் இஷ்டத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியாது, வாய் வெந்து போய்விடும்.

- Advertisement -

இந்த வெற்றிலையை விருந்து உண்ட பிறகு சாப்பிட்டால் ஜீரணமாகி மனதிற்கு திருப்தியை கொடுக்கும். கைலாயத்தில் ஒருமுறை சிவபெருமானும், பார்வதி தேவியும் விருந்து சாப்பிட்ட பிறகு சிவபெருமான் பார்வதி தேவியிடம், வெற்றிலை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று கேட்டார். இப்படி சொல்லிக் கொண்டிருப்பதை சிவனின் கழுத்தை அலங்கரிக்கும் வாசுகி பாம்பு கேட்ட உடனேயே விறுவிறுவென கழுத்தை விட்டு கீழே இறங்கி வெற்றிலையை தன் வாயில் கவ்வி கொண்டு வந்து ஈசனின் முன் போட்டது.

வாசுகிக்கு ஈசனுக்கு சேவை செய்ய ஒரு பாக்கியம் கிடைத்ததே என்கிற ஆர்வக் கோளாறு! தனக்குள் விஷம் இருப்பதைக் கூட மறந்துவிட்டு, வாயில் கவ்வி கொண்டு வந்து போட்டது ஆனால் அதன் பக்தியை மெச்சிக் கொள்ள நாம் தவற முடியாது. ஈசனும், பார்வதியும் வாசுகி செய்த இந்த செயலை பார்த்து மெய் சிலிர்த்துப் போனார்கள். இவ்வளவு பேரன்பா? பக்தி உனக்கு அதிகமாகத் தான் இருக்கிறது என்று கேலி செய்துவிட்டு, வாசுகி கவ்வி கொண்டு வந்த வெற்றிலையின் காம்பையும், நரம்பு பகுதிகளையும் நீக்கிவிட்டு நன்கு கழுவி விட்டு சாப்பிட்டார்களாம்.

- Advertisement -

இந்த காரணத்தினால் தான் ஆன்மீக ரீதியாக வெற்றிலையை பயன்படுத்தும் பொழுது காம்பை நீக்கி கிள்ளிவிட்டு பின்னர் பயன்படுத்துகிறார்கள் அறிவியல் ரீதியாகவும் வெற்றிலையின் நரம்புகள் மற்றும் காம்பு பகுதிகள் சாப்பிட்டால் உடலில் இருக்கும் வெள்ளை அணுக்கள் அழிந்து போகும் என்று கூறுகிறது. எனவே அறிவியல் ரீதியாகவும், வெற்றிலையின் காம்பு பகுதியை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்பது புலப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:

எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை தன்னில் கொண்டுள்ள இந்த வெற்றிலையின் காம்பு பகுதி, நடுப்பகுதி, நரம்பு பகுதி ஆகியவற்றை நீக்கி விட்டு மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் சளி பிரச்சனைகளிலிருந்து எளிதாக விடுபட்டு விடலாம். விஷ பூச்சிகளின் கடிகளுக்கு மருந்தாகவும் வெற்றிலையை பயன்படுத்துகிறார்கள். வெற்றிலை கொடி வீட்டில் இருந்தால் பாதி நோய்களுக்கு அதுவே மருந்தாக இருக்கும். அத்தகைய மருத்துவ பயன்கள் நிறைந்துள்ள வெற்றிலையை பாதுகாப்போம்.

சற்று முன்