பூஜையில் வைத்த இந்த 1 பொருளை மட்டும் வீணாக்கவே கூடாது. அது வீட்டிற்கு மேலும் மேலும் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும்.

poojai-room
- Advertisement -

பழங்காலம் தொட்டு சில பழக்கங்களை இன்றளவும் நாம் கடைபிடித்து வருகிறோம். அதில் ஒன்று தான் இந்த ஆரத்தி எடுப்பது, திருஷ்டி, கழிப்பது போன்றவை. இது பெரும்பாலும் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறும் போதும், பூஜைகள் முடிந்த பிறகும், வீதிகளில் சுவாமி ஊர்வலம் வரும்போது சுவாமிக்கு ஆரத்தி எடுப்பது என இன்றளவும் இந்த பழக்கத்தை நாம் கடைபிடித்து வருகிறோம். இதற்க்கு நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் வெற்றிலை. மகாலட்சுமியின் அம்சமாக நாம் பல பொருட்களை கூறினாலும் இந்த வெற்றிலை தான் முதன்மையான இடத்தில் உள்ளது.

ஏனென்றால் அனைத்து விசேஷங்களிலும் மற்ற பொருட்களை சுவாமிக்கு வைப்பதற்கு முன் முதலில் வெற்றிலை வைத்த பிறகு தான் பழம், பாக்கு, நெய்வேதியம், தேங்காய் என அனைத்தையும் நாம் கடவுளுக்கு படைத்து வணங்குவோம். ஆகவே எல்லாவற்றிலும் முதன்மையாக இருப்பதும் இந்த வெற்றிலை தான். இப்போது நான் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இது போன்ற சம்பரிதாயமும் சடங்குகளையும் நாம் செய்யும் போது இந்த இலையை நாம் வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது எப்படி என தெரிந்து கொள்வதற்கான பதிவு தான் இது.

- Advertisement -

இதுபோன்று விசேஷங்களுக்கும் சுவாமிக்கும் வாங்கும் போது வெற்றிலையை வாடாமல் வதங்காமல் நல்ல இலையாக தாருங்கள் என்று கேட்டு வாங்குவோம். அப்படி வாங்கி வந்த வெற்றிலையை நாம் இப்படி கற்பூரம் ஏற்றி அதை பொசுக்குவதும், இது மட்டுமில்லாமல் நம் வீட்டில் பூஜைக்கு வாங்கி வைத்திருக்கும் வெற்றிலையும் பூஜை முடிந்த உடன் எடுக்காமல் அப்படியே வாட விட்டு விடுவோம் அதுவும் நமக்கு நல்லதல்ல. ஒரு பொருளை நல்ல நிலையில் நாம் வீட்டிற்குள் கொண்டு வந்து அதை பொசுக்கியும், வாட விட்டும் வெளியில் போடுவது என்பது நம் குடும்பத்திற்கு என்றுமே நல்லதல்ல.

இந்த இலையின் மேல் வைத்து கற்பூரம் ஏற்றினால் தானே ஆரத்தி ஆகட்டும் திருஷ்டி ஆகட்டும் முழுமை பெறும். அப்படி இருக்க வெற்றிலை வாடாமல் கற்பூரம் ஏற்றுவது எப்படி? என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழக்கூடும். உங்களின் கேள்வியும் நியாயமானது தான். ஏனென்றால் பழங்காலம் தொட்டு செய்து வரும் பழக்கங்களில் இன்றளவும் எங்கும் மாறாத ஒன்றை மாற்ற வேண்டுமென்றால் எப்படி? வெற்றிலைக்கு பதிலாக வேறென்ன பொருள் வைத்து ஆரத்தி எடுப்பது? இப்படியான பல கேள்விகள் எழ தான் செய்யும்.

- Advertisement -

இதற்காக நீங்கள் பெரிய அளவில் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எப்போதும் போல நீங்கள் வெற்றிலை வைத்தே வணங்கலாம். ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றத்தை மட்டும் செய்தாலே போதும். அது என்னவென்றால் நீங்கள் ஆரத்திக்கு மஞ்சள் சுண்ணாம்பு எல்லாம் தண்ணீரில் கலந்த பிறகு அதற்கு மேல் இந்த வெற்றிலையை வைத்த பிறகு அதில் சிறிதளவு விபூதியை கொட்டி அதற்கு மேல்  கற்பூரத்தை வைத்து ஏற்றினால் இந்த கற்பூரம் எரியும் போது வரும் வெப்பமானது வெற்றிலையை பெருமளவில் தாக்காது. இதனால் வெற்றிலையும் கருகி வாடாது உங்களுக்கு வீட்டிற்கும் இது நல்லது.

இதுவரை இது போன்று விஷயம் நமக்கு தெரியாமல் இந்த தவறுகளை செய்து இருந்தால், இனி மேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது நம் வீட்டிற்கு நல்லது. வீட்டில் வைத்து வணங்கும் வெற்றிலையை வீட்டில் யாரேனும் பெரியவர்கள் சாப்பிடுவார்கள் என்றால் அவர்களுக்கு கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் அருகில் யாராவது வெற்றிலை போடுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு கொடுத்து விடுங்கள். யாரும் இல்லை என்றால் பசு மாட்டிற்காவது அந்த வெற்றிலையை கொடுத்து விடுங்கள். வாட வைத்து வெளியில் தூக்கி போட்டு வீணாக்காதீர்கள்.

- Advertisement -