- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

விபூதி எப்படி தோன்றியது தெரியுமா ?

நித்தமும் சிவனையே நினைத்துக்கொண்டிருந்த தீவிர சிவ பக்தன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பர்னநாதன். அவன் சிவனை நினைத்து கடுமையான தவம் புரிய எண்ணினான். உணவு உறக்கம் என அனைத்தையும் மறந்து அவன் கடுந்தவத்தை மேற்கொண்டான். ஆண்டுகள் பல கடந்தது ஆனால் அவன் தவம் கலையவில்லை.

பிறகொருநாள் தன்னுடைய தவத்தை முடித்துக்கொண்டு சிவனை வழிபட தொடங்கினான். சிவ வழிபாட்டை மிகுந்த சிரத்தையோடு அவன் செய்தான். ஒருநாள் தர்ப்பை புல்லை அறுத்துக்கொண்டிருகையில் அவன் கையில் அரிவாள் பட்டு கையில் ரத்தம் சிந்த தொடங்கியது. ஆனால் அவன் அதை பொருட்டுப்படுத்தாமல் புல்லை அறுத்துக்கொண்டிருந்தான்.

- Advertisement -

அவன் கையில் ரத்தம் சிந்திய அடுத்த நொடியே ஈசன் பதறிப்போனார். வேடுவ உருவத்தில் அவனிடம் வந்த ஈசன் ரத்தத்தை நிறுத்த கை விரலை அழுத்திப் பிடித்தார். அப்போது விரலில் வழிந்த ரத்தம் நின்று கைகளில் இருந்து சாம்பல் கொட்ட தொடங்கியது. இதனை கவனித்த பர்னநாதன், வந்திருப்பது ஈசன் தான் என்பதை உணர்ந்தான்.

ஐயனே எனக்காக நீங்களே வந்தீர்களா ! உங்களின் சுயரூபத்தில் இந்த அடியேனுக்கு காட்சி கொடுக்கக்கூடாதா என்று அவன் வேண்ட ஈசனும் அவனுக்கு சுயரூபத்தில் காட்சி கொடுத்தார். உன் கையில் குருதி வழிதோண்டியதை பார்க்க முடியாமல் தான் நான் ஓடோடி வந்தேன். உன்னுடைய குருதியை நிறுத்த உனக்காகவே நான் இந்த பிரத்யேகமான சாம்பலை உருவாக்கினேன். இன்று முதல் இது விபூதி என்று அழைக்கப்படும்.

- Advertisement -

நீ செய்த தவத்தின் பயனாகவே இந்த விபூதி உருவானது. இதை பூசிக்கொள்பவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று கூறிவிட்டு ஈசன் மறைந்தார். இப்படி தான் விபூதியை சிவபெருமான் இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தார் என்று கூறப்படுகிறது. பல அற்புத சக்திகளை கொண்ட விபூதியை நீங்களும் தினமும் அணியுங்கள் சிவனின் பரிபூரண அருளை பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே:
64 சிவ வடிவங்களும் அதன் விளக்கமும் ஒரு பார்வை.

இது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள் மற்றும் வேறு பல ஆன்மீக தகவல்களை உங்கள் மொபைலில் பெற தெய்வீகம் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -