தினம் ஜபிக்க வேண்டிய சிவனின் 64 வடிவங்களும் அதன் விளக்கமும்

siva-vadivangal

சிவபெருமான் பொதுவாக பல அவதாரங்களை எடுப்பது கிடையாது மாறாக பக்தராகளுக்கு அருள்மழை பொழிய அவர் பல வடிவங்களை எடுத்துள்ளார். 64 சிவ வடிவங்கள் மற்றும் அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

sivan

வடிவம்                         –                விளக்கம்
இலிங்கோத்பவ மூர்த்தி  –  இலிங்கமாக தோன்றிய வடிவம்
முகலிங்க மூர்த்தி          –  இலிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம்
சதாசிவ மூர்த்தி             –  ஐந்து முகத்துடன் உள்ள வடிவம்
மகா சதாசிவ மூர்த்தி     –  இருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம்
உமாமகேஸ்வர மூர்த்தி –  உமாமகேஸ்வர மூர்த்தி

சுகாசன மூர்த்தி             –   நல்லிருக்கை நாதர்
உமேச மூர்த்தி               –   உமையுடன் நின்றருளும் வடிவம்
சோமாஸ்கந்த மூர்த்தி   –   உமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம்
சந்திரசேகர மூர்த்தி        –   பிறை சூடியுள்ள வடிவம்
இடபாரூட மூர்த்தி         –   விடையேறி – காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம்

இடபாந்திக மூர்த்தி        –  அறவெள் விடைக்கு அருளிய வடிவம்
புஜங்கலளித மூர்த்தி      –  பாம்புகளைக் காத்து அருளிய வடிவம்
புஜங்கத்ராச மூர்த்தி       –  பாம்புகளை அடக்கிய வடிவம்
சந்த்யான்ருத்த மூர்த்தி  –  மாலைநேர நடன வடிவம்
சதாநிருத்த மூர்த்தி        –  எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்

சண்டதாண்டவ மூர்த்தி –  காளி காண ஆடிய நடன வடிவம்
கங்காதர மூர்த்தி           –  கங்கையணிந்த வடிவம்
கங்காவிசர்ஜன மூர்த்தி –  முடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம்
திரிபுராந்தக மூர்த்தி       –  முப்புரமெரி செய்த வடிவம் – முப்புரமெரித்த வடிவம்
கல்யாணசுந்தர மூர்த்தி  –  மணவழகர் வடிவம்

- Advertisement -

அர்த்தநாரீஸ்வர மூர்த்தி –  உமைபங்கன் – உமையை இடப்பாகமாகக் கொண்டவன்
கஜயுக்த மூர்த்தி              –  காயாசுரனை கொன்ற வடிவம்
ஜ்வாரபக்ன மூர்த்தி          –  சுரம் நீக்கும் வடிவம்
சார்த்தூலஹர மூர்த்தி     –  புலியினை அழித்த வடிவம்
பாசுபத மூர்த்தி                –  அருசுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம்

கங்காள மூர்த்தி                –  வாமனை கொன்று முதுகெழும்பினைக் கொண்ட வடிவம்
கேசவார்த்த மூர்த்தி          –  மாலொரு பாகர் வடிவம்
பிச்சாடன மூர்த்தி             –  பலிகொள் செல்வர் வடிவம்
சரப மூர்த்தி                      –  சரப வடிவம்
சடேச அனுக்ரஹ மூர்த்தி –  சண்டேசருக்கு அருளிய வடிவம்

தட்சிணாமூர்த்தி              –  தென்முகக் கடவுள்
யோக தட்சிணாமூர்த்தி    –  தவநிலைத் தென்முகக் கடவுள்
வீணா தட்சிணாமூர்த்தி    –  வீணையேந்திய தென்முகக் கடவுள்
காலந்தக மூர்த்தி             –  காலனைக் கொன்ற வடிவம்
காமதகன மூர்த்தி            –  காமனை எரித்த வடிவம்

இலகுளேஸ்வர மூர்த்தி   –  புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம்
பைரவ மூர்த்தி                –  ருத்திர வடிவம்
ஆபத்தோத்தரண மூர்த்தி –  முனிவர்களின் இடர் களைந்த வடிவம்
வடுக மூர்த்தி                  –  முண்டாசுரனை கொன்ற வடிவம்
சேத்திரபால மூர்த்தி        –  ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம்

வீரபத்ர மூர்த்தி               –  நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய வடிவம்
அகோர மூர்த்தி               –  சச்தந்துவை கொன்ற வடிவம்
தட்சயஞ்யஷத மூர்த்தி   –  தக்கன் வேள்வியை தகர்த்த வடிவம்
கிராத மூர்த்தி                 –  வேட்டுருவர்
குரு மூர்த்தி                   –  மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி வடிவம்

அசுவாருட மூர்த்தி         –  குதிரையேறு செல்வர்
கஜாந்திக மூர்த்தி           –  ஐராவதத்திற்கு அருளிய வடிவம்
சலந்தரவத மூர்த்தி        –  சலந்தரனைக் கொன்ற வடிவம்
ஏகபாதத்ரி மூர்த்தி         –  ஒற்றை திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
திரிபாதத்ரி மூர்த்தி        –  மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்

ஏகபாத மூர்த்தி                       –  ஒற்றை திருவடியுடைய வடிவம்
கௌரிவரப்ரத மூர்த்தி            –  உமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம்
சக்கரதான மூர்த்தி                  –  திருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம்
கௌரிலீலாசமன்வித மூர்த்தி – உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம்
விசாபகரண மூர்த்தி               – நீலகண்டர்

கருடன் அருகிருந்த மூர்த்தி   –  கருடனுக்கு அருளிய வடிவம்
பிரம்ம சிரச்சேத மூர்த்தி        –  பிரம்மாவின் தலையை கொய்த வடிவம் ( அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம்)
கூர்ம சம்ஹார மூர்த்தி          –  கூர்ம வடிவ திருமாலை அடக்கிய வடிவம்
மச்ச சம்ஹார மூர்த்தி           –  மச்ச வடிவ திருமாலை அடக்கிய வடிவம்
வராக சம்ஹார மூர்த்தி         –  வராக வடிவ திருமாலை அடக்கிய வடிவம்

இலிங்க மூர்த்தி                      –  அருவுருவ நிலை
பிரார்த்தனா மூர்த்தி                –  உமையின் ஊடலைத் தணித்த வடிவம்
இரத்த பிட்சா பிரதான மூர்த்தி – தேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம்
சிஷ்ய பாவ மூர்த்தி                 – முருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம்

sivan

மேலே குறிபிடிபட்டுள்ள வடிவங்கள் போக சிவனுக்கு இன்னும் பல வடிவங்கள் உள்ளன. அவை போக வடிவங்கள், யோக வடிவங்கள், கோப வடிவங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்கலாமே:
தானாய் தோன்றிய சிவன் வடிவம்..குகை முழுக்க சுயம்பு வடிவங்கள் ! எங்கு தெரியுமா ?

English Overview:

There are 64 siva vadivangal or sivan vadivangal. All those are listed above. Apart from these there are many vidivangal for sivan. All those are classified under boga vadivangal, yoga vadivangal and koba vadivangal.