விதியையே வெல்லக்கூடிய பலன் தரும் அறிய மந்திரம்

sivan-1

இந்து மத நம்பிக்கை படி ஒரு குழந்தை தன் அன்னையின் கருவில் இருக்கும்போது அதன் விதியானது எழுதப்படுகிறது என்று நம்பப்படுகிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று கூறப்பட்டாலும் விதியை மாற்றி எழுதும் வல்லமை இறைவன் ஒருவனுக்கே உண்டு. ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதற்க்கு கடுமையான பக்தி நெறி வேண்டும். அந்த வகையில் நம்முடைய விதியையே மாற்றி எழுதும் அளவிற்கு இறைவன் மனதை குளிர்விக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் இதோ.
Sivan

மந்திரம்:
தங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால் வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

விதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் இது பூ உலகில் இருக்கின்றனர். நமது புராணங்களை புரட்டி பார்த்தோமானால் விதி என்று ஒன்று இருக்கிறது என்றும் அதை இறைவனால் மாற்ற முடியும் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதற்கான ஒரு மிக சிறந்த உதாரணமாக திகழ்கிறது மார்க்கெண்டேயனின் வாழ்க்கை. அந்த வகையில் மேலே உள்ள மந்திரத்தை ஜபித்து விதியை மாற்றி ஒருவன் வாழ்வில் நடக்கவிருக்கும் தீங்கில் இருந்து தப்பிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
முருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்

English Overview:
Here we described about mantra to win fate in Tamil. One should chant this mantra on daily basis to overcome fate and to lead a happy life.