- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு ஏற்பட 3 விளக்கு பரிகாரம்

பண வரவு ஏற்பட 3 விளக்கு பரிகாரம்

- Advertisement -

பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு எளிமையான சூட்சம வழிபாடு என்றால், அது இந்த விளக்கு வழிபாடுதான். நிறைய பேர் வீடுகளில் வருமானம் வரும். ஆனால் அந்த வருமானம் நிலையாக தங்காது, வீண் செலவு ஆக்கிக் கொண்டே இருக்கும். சில பேர் வீட்டில் வருமானமே இருக்காது. ஆனால் செலவு மட்டும் வரிசை கட்டி நிற்கும்.

கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை, வட்டிக்கு மேல் வட்டி குட்டி போட்டுக் கொண்டே இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் நிலைமை ரொம்பவும் மோசமாக போகும். இப்படி எல்லாம் பணத்திற்கு கஷ்டப்பட்டால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். எளிமையான முறையில் பண பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்வது. இதோ உங்களை பண கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற எளிமையான விளக்கு பரிகாரம்.

- Advertisement -

பணக்கஷ்டம் தீர்க்கும் மூன்று விளக்கு பரிகாரம்

மூன்று மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 3 மண் அகல் விளக்குகளையும் நேராக அடுக்கி வைத்து விடுங்கள். ஒரே நேர்கோட்டில் அந்த விளக்கை இருக்க வேண்டும். அதற்கு ஒரு தட்டும் தயார் செய்து கொள்ளுங்கள். தட்டிற்கு மேல் தான் இந்த விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். தீபச்சுடர் மட்டும் மூன்று திசைகளை பார்த்தபடி வைக்க வேண்டும்.

முதல் விளக்கு கிழக்கு திசை பார்த்து எரிய வேண்டும், இரண்டாவது விளக்கு மேற்கு திசை பார்த்து எரிய வேண்டும், மூன்றாவது விளக்கு வடக்கு திசை பார்த்து எரிய வேண்டும். தீபச்சுடர் இந்த மூன்று திசை நோக்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான். (அடுக்கி வைத்த 3 மன்னர்கள் விளக்கு மூன்று திசை நோக்கி எறிய போகிறது.)

- Advertisement -

கிழக்கு திசைக்கு அதிபதி இந்திரன். மேற்கு திசைக்கு அதிபதி வருணன். வடக்கு திசைக்கு அதிபதி குபேரன். இந்த மூன்று பேரையும் நினைத்து, குலதெய்வத்தை நினைத்து மாலை 6 மணிக்கு, நல்லெண்ணெயை மண் அகல் விளக்கில் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு எங்கள் வீட்டில் பணக்கஷ்டம் வரக்கூடாது, வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனையை வைத்தால் உங்கள் பண கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.

அதாவது பணகஷ்டம் வரும்போது அதை சமாளிக்க கூடிய தெம்பை அந்த கடவுள் உங்களுக்கு கொடுத்து விடுவான். மாலை 1 மணி நேரம் இந்த விளக்கு வீட்டில் எரியும்படி பார்க்க வேண்டும். விளக்கை ஏற்றும் போது மனதை ஒருநிலைப்படுத்தி, இந்த விளக்கு ஏற்றுவதன் மூலம் எங்கள் பண கஷ்டம் முழுமையாக நீங்கும் என்று நம்பி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை நாளைய தினம் திங்கட்கிழமை துவங்குவதாக வைத்துக் கொள்வோம்.

- Advertisement -

அன்றிலிருந்து தொடர்ந்து 21 வாரம் இந்த விளக்கை ஏற்றும் போது உங்கள் வீட்டில் இருக்கும் நிதி நிலைமை வருமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எல்லாம் எந்த அளவுக்கு சரியாகி உள்ளது என்பதையும் கவனித்துக் கொண்டே வாருங்கள். உங்களுடைய கஷ்டம் படிப்படியாக குறைகிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்தால் பிரச்சனைகளும் உண்மையிலேயே குறைந்தது போல நீங்கள் உணர்ந்தால், இந்த விளக்கு ஏற்றுவதை நிறுத்தாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: சமையலறை எப்படி இருந்தால் கடன் சேராது?

தொடர்ந்து 48 நாள் இந்த விளக்கை ஏற்றும் போது உங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல காலம் பிறக்கும். மிக மிக எளிமையான பரிகாரம்தான். வீட்டு பூஜை அறையிலேயே இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நல்ல பலனையும் நல்ல பணத்தையும் கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் தந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்