வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை தவறியும் இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்! தரித்திரம் ஏற்பட்டுவிடும்.

vilakku-thiri

எல்லோருடைய வீட்டிலும் தீபம் ஏற்றுவது என்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணுவது ஆகும். தினமும் தீபம் ஏற்றுவது வீட்டிலிருக்கும் பீடை, தரித்திரத்தை விரட்டி அடிக்க கூடும். கெட்ட சக்திகள் நீங்கி, நல்ல சக்திகளை அதிகரிக்க செய்யும். மகாலட்சுமி தேவியை வீட்டிற்கு அழைக்கும் தீப ஜோதியை எரிய செய்வது திரி ஆகும். இந்தத் திரி எரிந்து முடிந்த பின் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? தீபத்தில் எரியும் திரி எப்படியானதாக இருந்தால் நன்மைகள் அதிகம் உண்டு? இவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vilakku2

தீபத்தில் எரியும் திரியானது பல்வேறு வகைகளில் விற்கப்படுகின்றன. அவற்றில் பஞ்சு திரி என்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. பஞ்சு திரியில் தீபம் ஏற்றினால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பஞ்சு திரியை பன்னீரில் நனைத்து பின் உலர்த்தி பயன்படுத்துவது எண்ணற்ற நன்மைகளை கிடைக்க செய்வதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. மற்ற வகை திரிகள் ஒவ்வொன்றிக்கும், ஒவ்வொரு பலன்களும் உண்டு. வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி என்று வகை வகையான திரிகள் பூஜைக்கு உகந்தவையாக உள்ளன. இவற்றில் ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஆற்றல்களும் உண்டு.

அதுபோல் திரிகளுக்கு நிறங்களும் பல்வேறு வகைகளில் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொரு நிறம் கொண்ட திரிகளும், ஒவ்வொரு வகையான பரிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சிகப்பு திரி கொண்டு தீபம் ஏற்றினால் கடன்கள் தீரும் என்பது ஐதீகம். அதுபோல் மஞ்சள் நிறத் திரியில் தீபம் ஏற்றுபவர்களுக்கு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. கருப்பு நிறம் கொண்ட திரியை தீபத்தில் ஏற்றக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

color-thiri

ஒரு முறை விளக்கு ஏற்றப் பயன்படும் திரியை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று பலரும் இதை தான் செய்து வருகின்றனர். தீபத்தில் இருக்கும் திரியானது கருகி விடாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமையாகும். தீபத் திரியானது கருகிப் போகும் பொழுது, வீட்டில் தேவையில்லாத மன சஞ்சலங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும் என்பது பலருடைய நம்பிக்கை. இதனால் திரி எரியும் முன்பு தீபத்தை அமர்த்துவது நல்லது என்றும் கூறப்படுகிறது.

அதுபோல் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தீபத்தில் இருக்கும் திரியை ஒரு பொழுதும் எடுத்து குப்பையில் வீச கூடாது. தீபத்தில் எரியும் திரியை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் நெருப்பில் போட்டு இந்த திரிகளை எரித்து விடலாம். திரியை பச்சை நிறமாகும் வரை விளக்கில் அப்படியே வைத்திருக்கவும் கூடாது. இது தரித்திரத்தை ஏற்படுத்தும். விளக்கில் இருக்கும் எண்ணெய் அல்லது திரியானது நிறம் மாறும் முன்பே சுத்தம் செய்து விட வேண்டும்.

kamatchi-vilakku

விளக்கில் எரிந்து கொண்டிருக்கும் திரியை கைகள் வைத்து அணைக்க கூடாது. தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. புஷ்பத்தை வைத்து தீபத்தை அணைக்கலாம், அல்லது வத்திக்குச்சி வைத்து எண்ணெயில் மூழ்கும்படி தள்ளிவிட்டும் தீப ஜோதியை அணைத்து விடலாம். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் திரியை ஒரு பாலிதீன் பையில் சேகரித்துக் கொள்ளுங்கள். அதனை எரிந்த கொட்டாங்குச்சி தணலில் போட்டு வெள்ளிக் கிழமைகளில் சம்பிராணியும் போட்டுக் கொள்ளலாம்.