விளக்கு வைத்த பின்னர் அவசர தேவைக்கு கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

vilakku-cash
- Advertisement -

விளக்கு வைத்த பின்னர் ஒரு சில பொருட்களை யாருக்கும் கொடுக்க கூடாது என்பது சாஸ்திர நியதி. அதில் முக்கியமாக இருப்பது பணம். ஒரு வீட்டில் விளக்கு வைத்த பின்னர் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த நேரத்தில் பணத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது, நம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை விரட்டி அடிப்பதற்கு சமம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை வெள்ளிக்கிழமை அன்று தான் கடைபிடிக்க வேண்டும் என்றில்லை. எப்போது விளக்கு வைத்தாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு சாஸ்திரம்.

ainthu-muga-vilakku

அப்படி இருக்கும் பொழுது திடீரென அவசர தேவைக்கு பணம் தேவை எனக் கேட்டு வருபவர்களிடம் நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? இது தர்மசங்கடமான நிலையில் உங்களை நிறுத்தும். அவசர தேவைக்கு பணம் கொடுப்பதும் அவசியமான ஒன்று தான். அதே சமயத்தில் விளக்கு வைத்த நேரத்தில் பணம் கொடுப்பதை தவிர்ப்பதும் அவசியமான ஒன்று தான். இரண்டு விஷயங்களும் ஒரே தராசு தட்டில் நிற்கின்றன. இதை சரி சமமாக கையாள்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

உண்மையில் விளக்கு வைத்த பின்னர் நீங்கள் ஒருவருக்கு கைநீட்டி பணமாக கொடுத்தால், குடும்பத்தில் பண வரவு தடைபடும். லக்ஷ்மி கடாட்சம் குறையும். அது எந்த கிழமையில் செய்தாலும் தவறு தான். இதனால் உங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு நிகழும். வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இல்லை. ஆனால் நீங்கள் விளக்கு ஏற்றிய பின் மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு வரை பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றை தவிர்ப்பது தான், குடும்பத்திற்கு நல்லது. இதை எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் கடைபிடித்து வந்தால் வீட்டில் தனவரவிற்கு பஞ்சமிருக்காது. குறைவில்லாத செல்வம் தடையில்லாமல் வரும்.

counting-cash

சரி இப்பொழுது உயிர் போகிற பிரச்சினையில் இருக்கிறார்கள். உதவி என்று வந்து நிற்கிறார்கள். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டீர்கள்? இந்த சமயத்தில் என்ன செய்வீர்கள்? ஒருபுறம் சாஸ்திரம்! இன்னொருபுறம் மனிதநேயம்! இந்த இரண்டிற்கும் இடையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? மனிதநேயம் தான் முக்கியம் என்பவர்கள் தங்களுடைய வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் குறைந்தால் பரவாயில்லையா? சுயநலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவது நல்ல விஷயம் தான். இல்லை என்று கூற வரவில்லை. ஆனால் அதே சமயத்தில் சாஸ்திரத்தையும் கடைபிடிப்பது சிலர் முக்கியம் என்று நினைப்பார்கள். இது போன்ற சமயத்தில் தான் நமக்கு ஆன்மீகமா? அறிவா? என்கிற கேள்வி எழும்.

- Advertisement -

இரண்டையும் சமன் செய்ய அறிவை கையாளுங்கள். அதற்காக ஆன்மீகத்தை ஒதுக்கி விடாதீர்கள். விளக்கு வைத்த பின்னர் ஒருவர் உதவி என்று மறுக்க முடியாத நிலையில் கேட்கும் பொழுது பண உதவி செய்ய முடியவில்லை என்றாலும் வேறு வகையில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். அதற்கு விஞ்ஞானம் நமக்கு பல வகைகளை கற்றுக் கொடுத்துள்ளது.

internet

உடனடி தேவை இல்லை என்றால் விளக்கு எரிந்து முடிந்த பின் பணமாக அல்லாமல் இன்றைய நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் இணைய வழியில் பணப்பரிமாற்றம் செய்யலாம். இதுவும் பணம் தானே! என்று சிலர் கேட்கலாம். இது பணமாக இருந்தாலும் உங்கள் கையிலிருந்து, உங்கள் வீட்டில் இருந்து, மகாலட்சுமியை நீங்கள் கொடுப்பதாக அர்த்தம் ஆகாது அல்லவா? அதனால் ஓரளவிற்கு அதன் பாதிப்பு உங்களுக்கு ஏற்படாது. நல்ல விஷயத்திற்காக நாம் செய்யும் இந்த விஷயம் புண்ணியக் கணக்கில் சேர்வதால் பிரச்சனையும் சுலபமாக தீர்ந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
மனதில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர உங்கள் வீட்டு வாசலில் இப்படி செய்யுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -