இந்த 1 இலை உங்களுடைய வீட்டில் இருந்தால் போதுமே! தினம் தினம் நீங்கள் செல்வ மழையில் நனையலாம்.

vilvam-sivan

தினம் தினம் செல்வ மழையில் நனைய யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் இந்த செல்வம் என்ற சொல்லுக்கு நாம் அனைவரும் தவறான அர்த்தத்தை புரிந்து கொண்டிருக்கின்றோம். செல்வம் என்றால் வெறும் பணம் காசை மட்டும் குறிப்பது அல்ல. அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!’ என்று வாழ்த்துவார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களும் நிறைந்திருந்தால் தான் அவருடைய வாழ்க்கை நிறைவு பெறும். ஆனால் இன்றைய கால சூழ்நிலை எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது.

selvangal

பதினாறு வகை செல்வங்களில், எல்லா வகையான செல்வங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வெறும் பணத்தை மட்டுமே முக்கியமாக நினைத்து நாம் வாழ்ந்து வருகின்றோம். சரி, என்ன செய்வது இன்றைக்கு நிலைமை அப்படி மாறி விட்டது. ஒருவருடைய வாழ்க்கையில் பதினாறு வகையான செல்வத்தையும் பெற்று மனநிறைவோடு சந்தோஷமாக வாழ, எந்த இலையை நம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும், என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அந்த சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைதான் அந்த மகத்துவம் வாய்ந்த இலை. இந்த வில்வ இலைக்கு எந்த அளவிற்கு மகத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு மருத்துவ குணமும் நிறைந்துள்ளது. தினமும் காலை கண் விழித்தவுடன் நீங்கள் முதலில் பார்க்கும் பொருள், இந்த வில்வ இலை ஆக இருந்தால் அந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

வில்வ இலைகளை ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது பித்தளை பாத்திரத்திலோ போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மூடி போட வேண்டாம். திறந்த நிலையிலேயே இருக்கலாம். காலையில் கண்விழித்ததும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் தினம்தோறும் இந்த வில்வ இலையில் கண்விழிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

- Advertisement -

ஒரு சில நிமிடம் அந்த வில்வ இலைகளை பார்த்து அந்த எம் பெருமானை வேண்டி இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக தொடங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அதன் பிறகு எப்போதும் போல உங்களது வேலையை தொடங்கலாம். பித்தளை பாத்திரத்திற்குள் இருக்கக்கூடிய வில்வ இலைகளை வாரத்திற்கு ஒருநாள் மாற்றினால் கூட போதும். காய்ந்த இலைகளை தூக்கி குப்பைத் தொட்டியில் போட கூடாது.

lingam-vilva-archanai

காய்ந்த வில்வ இலைகளை பொடியாக்கி நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியில் கலந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில், அந்த வில்வ இலை பொடியை கொஞ்சமாக கலந்து தினமும் குளித்து வந்தால் நல்லதே நடக்கும்.

vibuthi

முடிந்தால் இந்த வில்வ இலை பொடியில் இருந்து ஒரு சிட்டிகை வில்வ பொடியை எடுத்து சுத்தமான ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நம்முடைய உடலை எந்த ஒரு நோயும் நொடியும் தாக்காமல் பார்த்துக் கொள்ள கூடிய அளவிற்கு சக்திவாய்ந்தது இந்த வில்வ இலை.

vilvam1

மகத்துவம் வாய்ந்த எந்த பொருளுடைய மதிப்பும் நமக்குத் தெரிவதே கிடையாது. இந்த வில்வ இலையின் மகத்துவத்தை பயன்படுத்தி வருபவர்களுக்குத் தான் தெரியும், இதனுடைய அருமை பெருமைகளும். எம்பெருமானின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரங்களை முயற்சி செய்து பார்த்து பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.