- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் நேரம்

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் நேரம்

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை நாம் விநாயகர் சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினம் தான் விநாயகர் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சதுர்த்தி தினத்தன்று வீட்டிற்கு புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து அவருக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்வோம். மேலும் அவருக்கு மலர்களாலும் இலைகளாலும் அர்ச்சனை செய்து அவர் வீட்டில் இருக்கும் நாள் வரை ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வோம். 5 நாட்களுக்குப் பிறகு ஏழு நாட்களுக்குப் பிறகு விநாயகரை கொண்டு போய் ஏதாவது ஒரு ஆலயத்தில் வைத்து விடுவோம். அவர்கள் அதை கடலில் கொண்டு போய் கரைத்து விடுவார்கள். அருகில் நீர்நிலைகள் இருப்பவர்கள் அந்த நீர் நிலையிலேயே கொண்டு போய் கரைத்து விடுவார்கள். இதுதான் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் பலரும் செய்யக்கூடிய வழிபாடு. அப்படிப்பட்ட வழிபாட்டை எந்த நேரத்தில் செய்தால் நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் நேரம்

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு சதுர்த்தி வரும். தேய்பிறை சதுர்த்தியை நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். அன்றைய தினம் விநாயகப் பெருமானின் ஆலயத்தில் பல சிறப்பான அபிஷேகங்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். வளர்பிறை சதுர்த்தியிலும் விநாயகப் பெருமானுக்கு வழிபாடுகள் நடைபெறும். அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தி நாளன்று விநாயகர் அவதரித்தார் என்பதால் அன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. சதுர்த்தி திதி என்பது செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி மாலை 3 மணிக்கு மேலே ஆரம்பித்து விடுகிறது. ஆனால் சூரிய உதயம் தான் கணக்கு என்பதால் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி என்பது கொண்டாடப்பட வேண்டும். அன்றைய தினம் விநாயகரை எந்த நேரத்தில் வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

செப்டம்பர் 7ஆம் தேதி என்பது சனிக்கிழமையாக வருகிறது. சனிக்கிழமை 9:00 மணியில் இருந்து 10:30 மணி வரை ராகு காலம். மேலும் 1:30 மணியிலிருந்து 3 மணி வரை எமகண்டம் இருக்கிறது. மூன்று மணிக்கு மேலே சதுர்த்தி திதி நிறைவடைகிறது. அதனால் நாம் விநாயகர் பெருமானை வீட்டிற்கு வாங்கி வர வேண்டிய நேரம் ஆக கருதப்படுவது காலை 7:35 மணியிலிருந்து 8:35 மணி வரை. அதேபோல் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வீட்டில் வழிபட வேண்டிய நேரம் என்பது காலை 10:35 மணிக்கு மேல் 1:25 மணிக்குள் செய்துவிட வேண்டும்.

- Advertisement -

ராகு காலம், எமகண்டத்தை தவிர்த்து மீதம் இருக்கும் நேரத்தில் விநாயகப் பெருமானை வீட்டிற்கு வாங்கி வருவதும், அதே சமயம் விநாயகப் பெருமானுக்குரிய பிரசாதங்களை செய்து வைத்து அவருக்கு அர்ச்சனைகளும், வழிபாடுகளும் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் விநாயகர் பெருமானின் அருள் நமக்கு கிடைக்க பெறுவதோடு நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:பண நெருக்கடியை தீர்க்கும் குபேர தீபம்
இந்த நேரத்தை தவறவிடாமல் விநாயகப் பெருமானின் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்தால் அவரின் அருளால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்