விநாயகருடைய இந்த 16 மந்திரங்களை தினமும் உச்சரித்து விட்டு இப்படி வழிபட்டு வந்தால் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும்!

விநாயகருக்கு உரிய பிரத்தியேக மந்திரங்களைத் தொடர்ந்து உச்சரித்து வந்தாலே வேண்டிய வேண்டுதல்கள் அத்தனையும் பலிக்கும் அதிலும் குறிப்பாக விநாயகருடைய இந்த பதினாறு மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வருபவர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். விநாயகருடைய மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த இந்த பதினாறு மந்திரங்கள் உச்சரித்து விட்டு தொடர்ந்து விநாயகருக்கு இப்படி வழிபாடு செய்து வந்தால் நீங்கள் நினைத்தது பலிக்காமல் இருக்கவே செய்யாது. எத்தனையோ வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றி தரும் இந்த விநாயகர் மந்திரத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Vinayagar-1

விநாயகருடைய மூலமந்திரத்தை உச்சரித்து வினாயகருற்கு தேங்காயை உடைத்து வழிபட்டால் காரியத் தடை விலகும் என்பது ஐதீகம். அதனால் தான் பக்தர்கள் முதல் காரியமாக எந்த விஷயத்திற்கு சென்றாலும் முழுமுதற் கடவுளான விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கு தேங்காயை உடைத்து வழிபட்டு விட்டு பின்னர் செல்கிறார்கள்.

சிதறு தேங்காய் உடைந்து சிதறுவது போல காரிய தடைகள் அனைத்தும் சிதறி வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த சக்தி வாய்ந்த 16 மந்திரங்களை வீட்டில் அல்லது கோவில்களில் விநாயகருக்கு உச்சரித்து அவருக்கு பிடித்தமான நைவேத்தியம் படைத்து வழிபட்டு வந்தால் சகல சம்பத்துக்களும் நமக்கு கிட்டும். எத்தகைய வேண்டுதல்கள் நமக்கு இருந்தாலும் அது உடனடியாக பலிக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக இருந்து வருகிறது.

vinayagar-5

சக்தி வாய்ந்த விநாயக மந்திரம் 16:
ஓம் சுமுகாய நம!
ஓம் ஏகதந்தாய நம!
ஓம் கபிலாய நம!
ஓம் கஜகர்ணகாய நம!

- Advertisement -

ஓம் லம்போதராய நம!
ஓம் விகடாய நம!
ஓம் விக்னராஜாய நம!
ஓம் விநாயகாய நம!
ஓம் தூமகேதவே நம!

vinayagar-1

ஓம் கணாத்யஷாய நம!
ஓம் வக்ரதுண்டாய நம!
ஓம் சூர்ப்பகர்ணாய நம!
ஓம் ஹேரம்பாய நம!
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம!

ஓம் ஸித்திவிநாயகாய நம!
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம!!

vinayagar

மேலே கூறப்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரத்தை உச்சரித்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் முதலியவற்றை நிவேதனம் வைத்து வீட்டில் அல்லது கோவிலில் வழிபட வேண்டும். வீட்டை விட கோவிலில் இவ்வாறு வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை கொடுக்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்யலாம். விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு மிகவும் சக்திகளை கொடுக்கக் கூடிய இந்த மந்திரங்கள் நாம் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமல் நமக்கு புது உத்வேகம் பிறக்கும்.

காரிய வெற்றிக்கு இந்த பதினாறு மந்திரங்களை தினமும் உச்சரித்து வரலாம். எந்த ஒரு விஷயமும் தடையில்லாமல் நடப்பதற்கு விநாயகர் துணை வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் விநாயகருடைய இந்த மந்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு தோல்விகள் என்பதே இல்லை.

vinayagar

வீட்டில் வழிபடுபவர்கள் விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம் இட்டு எருக்கம்பூ மாலை சாற்றி வழிபட வேண்டும். விநாயகர் சிலை வைத்து இருப்பவர்கள் அதனை பாலாலும், பன்னீர்னாலும் முதலில் அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும் . அதன் பின்னர் தூய தண்ணீரால் அபிஷேகம் செய்து மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு பின்னர் நிவேதனம் வைத்து எருக்கம்பூ மாலை சாற்றி தூப, தீப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும்.

astrology-vinayagar

இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த கிழமைகளில் வேண்டுமானாலும் தாராளமாக நீங்கள் செய்யலாம். விநாயகர் மந்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு நேரம் காலம் என்பது கிடையாது. நேரமும், காலமும் அம்மந்திரத்தை உச்சரிக்கும் நபர்களை ஒன்றுமே செய்ய முடியாது. அத்தகைய சக்தி வாய்ந்த விநாயகருடைய இந்த பதினாறு மந்திரங்களை நினைவில் ஏற்றி தினமும் உச்சரித்து வாருங்கள் சகலமும் வசமாகும்.