எந்த ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் நாம் விநாயகர் பெருமானை வழிப்பட்டு விட்டு தான் ஆரம்பிப்போம். விநாயகப் பெருமானின் அருள் இருந்தால் நம்முடைய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் என்றும் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்பாடாது என்றும் பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்தி எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விநாயகப் பெருமானை வழிபட வேண்டும் என்றால் அதற்கு நேரம் காலம் என்று எதுவும் இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நாம் அவரை வழிபடலாம். இருப்பினும் அவருக்கென்று சில பிடித்தமான பொருட்கள் இருக்கும். அதை பயன்படுத்தி நாம் அவரை வழிபடும் பொழுது அந்த வழிபாட்டிற்குரிய பலன் என்பது நமக்கு விரைவிலேயே கிடைக்கும்.
அந்த வகையில் தான் சதுர்த்தி தினமும் திகழ்கிறது. மற்ற நாட்களில் அவரை வழிபடுவதை விட சதுர்த்தி தினத்தில் நாம் வழிபட்டோம் என்றால் அதற்குரிய பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் தான் விநாயகப் பெருமானுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றும் அந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மையை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமை என்பது வழிபாட்டிற்குரிய கிழமையாக திகழ்கிறது. இந்த கிழமையில் நாம் விநாயகர் பெருமானை வழிப்பட்டோம் என்றால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த வழிபாட்டை ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயும் நாம் செய்யலாம். வீட்டில் செய்வதாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் விநாயகரின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் ஒரு அகல் விளக்கை வைத்து அதற்கு நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றிவிட்டு விநாயகப் பெருமானின் மூல மந்திரமான “வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப நிர்விக்நம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இப்படி நாம் செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட புத்திர பாக்கியம் இல்லாத இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் சிறந்த புத்திசாலியாக திகழ்வார்கள்.
இதேபோல் வெள்ளிக்கிழமை அன்று விநாயகப் பெருமாளுக்கு பஞ்சமுக விளக்கில் சுத்தமான நல்லெண்ணையை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி வழிபடும் பொழுது நமக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும், செல்வம் சேரும், நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: தனம் தானியம் அதிகரிக்க சூட்சம பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.