- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசங்கடங்களை தீர்க்கும் விநாயகர் தீபம்

சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் தீபம்

- Advertisement -

மிகவும் எளிமையான தெய்வம் என்று கூறக்கூடியவர் தான் விநாயகர் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானிடம் நாம் என்ன வேண்டுதல் வைத்து வேண்டினாலும் அதை உடனே நிறைவேற்றி தரும் அற்புதமான கடவுளாக திகழ்கிறார். இவருக்காக பெரிதும் நாம் சிரமப்பட்டு எந்தவித வழிபாட்டையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவரை மனதார நினைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டாலே அவர் மனம் மகிழ்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி விடுவார், அப்படிப்பட்ட விநாயகருக்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு கஷ்டங்கள் என்பது இருக்கத்தான் செய்யும். அல்லது நீண்ட நாட்களாக முயற்சி செய்து ஏதாவது ஒரு காரியம் நடைபெறாமல் தடைகள் உண்டாகிக் கொண்டே இருக்கும். இப்படி எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்குவதற்கு விநாயகப் பெருமானுக்கு ஒரே ஒரு தீபத்தை நாம் ஏற்றினால் போதும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது எந்த நாளில் ஏற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த தீபத்தை திங்கட்கிழமை அன்றுதான் ஏற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் வளர்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்களில் ஏற்றலாம். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்திற்கு செல்லலாம். அவ்வாறு செல்லும் பொழுது புதிதாக வாங்கிய ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.

விநாயகரின் ஆலயத்திற்கு சென்று விநாயகருக்கு முன்பாக அந்த அகல் விளக்கை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி ஒரே ஒரு வெட்டிவேரை அதற்குள் போட்டு விட வேண்டும். பிறகு ஒரு பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார விநாயக பெருமானிடம் கூறிவிட்டு அவரை பதினாறு முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு வலம் வரும் பொழுது விநாயகர் பெருமானுக்குரிய மந்திரமான “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கங் கணபதயே வரவரத சர்வ ஜனம்மே வசமினய ஸ்வாகா” என்னும் மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிருக்கும் ஒவ்வொரு முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஆக மொத்தம் 16 சுற்றுகளுக்கு பதினாறு முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட்டுவிட்டு வரவேண்டும்.

இப்படி தொடர்ந்து 16 திங்கட்கிழமையோ அல்லது 16 சதுர்த்தியிலோ அல்லது 16 சங்கடஹர சதுர்த்தியிலோ விநாயக பெருமானை வழிபடுபவர்கள் எந்த வேண்டுதலுக்காக இந்த வழிபாட்டை மேற்கொண்டார்களோ அந்த வேண்டுதலை விநாயகப் பெருமான் நிறைவேற்றி தருவார். எந்த நாளில் இந்த வழிபாட்டை ஆரம்பித்தோமோ அதே நாளில் தான் தொடர்ச்சியாக 16 வாரங்களும் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி வசிய திலகம்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அவர்கள் வேண்டிய அனைத்தும் நடக்கும். சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.

சற்று முன்