வினைகள் பலவற்றை போக்கும் விநாயகர் துதி

Vinayagar-1

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனின் கர்ம வினைகளை பொறுத்தே அமைகிறது என்பது வேதங்கள் அனைத்தும் கூறும் உண்மையாகும். நம்மில் சிலருக்கு எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் பலவிதமான தடைகள் உண்டாகிறது. இல்லற வாழ்விலும் தம்பதிகளிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றி பிரிந்து வாழும் சூழலும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதும் ஏற்படுகிறது. இத்தகைய சங்கடங்களை போக்க கூடிய கடவுள் விநாயக பெருமான். அவரை வழிபடும் தினமான சங்கடஹர சதுர்த்தி தினத்தில் கூறி வழிபட தமிழ் துதி இதோ.

vinayagar

விநாயகர் துதி

ஓத வினையகலும் ஓங்குபுகழ் பெருகும்
காதல் பொருள் அனைத்தும் கைகூடும்
சீதம் பனிக்கோட்டு மால்வரைமேல் பாரதப்
போர்த்தீட்டும் தனிக்கோட்டு வாரணத்தின் தாள்

பெருந்தேவனார் என்கிற தமிழ்புலவரால் இயற்றப்பட்ட விநாயகர் துதி இது. இந்த துதியை தின்தோறும் காலையில் 9 முறை துதித்து, உங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வது சிறந்தது. விநாயகருக்குரிய “சங்கடஹர சதுர்த்தி” தினத்தன்று மாலை விநாயகர் கோவிலில் நடக்கும் விநாயகர் பூஜையின் போது, இந்த துதியை 9 முதல் 27 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் உங்களுக்கு காரிய தடைகள் மற்றும் வினைகள் நீங்கும். புகழ் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்றிணைவார்கள். அதிக பொருள்வரவு இருக்கும்.

vinayagar

கரிமுகன், தொந்தியப்பன் என்கிற பெயர்களில் பழைய தமிழ் இலக்கியங்களில் விநாயக பெருமானை பற்றிய குறிப்புக்கள் உள்ளது. விநாயகன் என்றாலே வினை தீர்க்கும் கடவுள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.தெய்வங்களிலேயே மிக எளிமையாக, எந்த ஒரு இடத்திலும் கோவில் கொண்டிருப்பவராக விநாயக மூர்த்தி இருக்கிறார். பக்தர்கள் சுலபமாக அணுகக்கூடிய தெய்வமாகவும் விநாயக பெருமான் இருக்கிறார். அவரின் வழிபாட்டிற்குரிய தினமான சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மேற்கூறிய மந்திரத்தை கூறி துதித்தால் அணைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க தொடங்கும்.

இதையும் படிக்கலாமே:
மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vinayagar manthiram in Tamil or Vinayagar thuthi in Tamil. It is also called as Vinayagar slogam or slogan or slokam in Tamil or Vinayagar mantra lyrics Tamil