நம்பிக்கையோடு இரண்டு அருகம்புல்லை விநாயகர் முன்பு வைத்துவிட்டு நீங்கள் என்ன பேசினாலும் அவரது செவிகளில் விழும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் தீராத பிரச்சனை இருக்கிறது எதைத் தொட்டாலும் காரியத்தடை, வீட்டில் ஒரு சுப காரியங்கள் கூட நடப்பதற்கு அறிகுறியே தென்படவில்லை, எவ்வளவு முயற்சி செய்தாலும் வாழ்க்கை பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது, என்பவர்கள் பின் சொல்லக்கூடிய இந்த முறைப்படி விநாயகரை ஒரு திங்கட்கிழமை வழிபாடு செய்து பாருங்கள்.
பிறகு யார் சொன்னாலும் இந்த வழிபாட்டை தவற விட மாட்டீர்கள். நீங்களே வாரம் வாரம் திங்கள் கிழமை இந்த வழிபாட்டை செய்ய துவங்கி விடுவீர்கள். விநாயகரை வசியம் செய்யக்கூடிய அந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
விநாயகர் வசியம் பரிகாரம்
நல்ல வாசம் நிறைந்த பொருட்களுக்கு, நல்ல சக்தியை வசியம் செய்யக்கூடிய தன்மை இருக்கும். அந்த வகையில் கிராம்பு பொடி, புனுகு பேஸ்ட், இந்த இரண்டு பொருளையும் நீங்கள் விநாயகர் வழிபாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் புனுகு பேஸ்ட் போட்டு, அதில் கிராம்பு பொடி போட்டு கலந்தால் ஒரு கலவை உங்களுக்கு கிடைக்கும். ஒரு வெற்றிலையின் மேலே இந்த பசையை நன்றாக தடவி விடுங்கள். ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த பசை தடவிய வெற்றிலையின் மேல், உங்களுடைய கோரிக்கையை எழுத வேண்டும்.
உதாரணத்திற்கு திருமண தடை அகல வேண்டும், பிள்ளைகள் படிப்பில் இருக்கும் தடை விலக வேண்டும், வருமானத்தில் இருக்கும் தடை விலக வேண்டும், இப்படி உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தடையானது விலக வேண்டும் என்று ஒரு வரியில் எழுத வேண்டும். ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் எழுத வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கையில் என்ன பிரச்சனை இருக்கிறதோ, அது உங்களை விட்டு நீங்க வேண்டும், அந்த தடை விலக வேண்டும் என்று இந்த வெற்றிலையில் எழுதி விநாயகருக்கு பாதத்தில் வைத்து, அந்த வெற்றிலையின் மேலே இரண்டு அருகம்புல், விநாயகருக்கு இரண்டு அருகம்புல் சூட்டி, கற்பூர ஆழத்தை காண்பித்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். விநாயகருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு பிரசாதம் வைக்க வேண்டும். விநாயகர் சாப்பாட்டு பிரியர்.
ஆகவே அவருக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பிரசாதம், பொரி உருண்டை, வேர்க்கடலை உருண்டை, பேரிச்சம்பழம், கற்கண்டு வாழைப்பழம், இப்படி ஏதாவது ஒரு பிரசாதம் வைத்து உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். மனம் உருகி இந்த முறையில் விநாயகரிடம் தடைகள் விலக வேண்டிக் கொண்டால், ஒரே நாளில் உங்களுடைய வேண்டுதல் விநாயகர் செவிகளில் விழும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: சொத்து வாங்கும் யோகம் பெற
அதி அற்புதம் வாய்ந்த தாந்திரீக பரிகாரத்தை அனைவரும் செய்து பலன் பெற வேண்டும். ஒரு வாரம் இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்களுடைய வாழ்க்கையில் வரும் மாற்றத்தை நீங்கள் உணரலாம். வெற்றிலை வாடிய பிறகு எடுத்து பூஜை அறை குப்பையோடு சேர்த்து விடலாம். வாரம் தோறும் ஒரு வெற்றிலையில் உங்கள் கோரிக்கையை இப்படி எழுதி பிள்ளையார் பாதத்தில் வையுங்கள். நிச்சயம் நல்ல வழி பிறக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.