- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிநாயகர் ஆலயத்திற்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்

விநாயகர் ஆலயத்திற்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி என்றதும் பலரும் வீட்டில் செய்யக்கூடிய விநாயகர் வழிபாட்டிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் தருவார்கள். அன்றைய நாளில் வீட்டிற்கு என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும்? வீட்டில் என்னென்ன பூஜைகள் செய்ய வேண்டும் என்பதிலேயே அதிக அளவு கவனம் செலுத்தி அதை செய்து விநாயகரின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் விநாயகருக்குரிய ஆலயங்களில் விநாயகருக்காக சிறப்பு மிகுந்த அபிஷேகங்களும் வழிபாடுகளும் ஆராதனைகளும் நிகழும். அதிலும் கலந்து கொள்பவர்களுக்கு கூடுதல் சிறப்பு உண்டாகும். அப்படி விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் ஆலயத்தில் செய்யக்கூடிய பூஜைகளுக்கும் வழிபாட்டிற்கும் எந்தெந்த பொருட்களை வாங்கித் தந்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகர் ஆலயத்திற்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள்

வீட்டில் விநாயகரை எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு ஆலயத்தில் இருக்கக்கூடிய விநாயகரையும் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டிற்கு தான் விநாயகரை அழைத்து வந்து விட்டோமே வீட்டில் தான் பூஜை செய்து விட்டோமே வீட்டில் தான் வழிபாடுகள் அனைத்தும் நிறைவு செய்து விட்டோமே என்று இருக்காமல் வீட்டில் வழிபாடுகளை செய்து முடித்த பிறகு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கிருக்கும் விநாயகரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய வழிபாட்டிற்குரிய முழுமையான பலனை நம்மால் பெற முடியும். அப்படி விநாயகரை வழிபாடு செய்வதற்கு விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் பொழுது ஒரு சில சூட்சமமான பொருட்களை எடுத்துச் செல்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும். இந்த பொருட்களை விநாயகர் சதுர்த்தி அன்றுதான் வாங்கித் தரவேண்டும் என்று இல்லை. அதற்கு முதல் நாளே வாங்கி வாங்கியும் கொடுக்கலாம்.

- Advertisement -

விநாயகருக்கு மிகவும் உகந்த பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் அருகம்புல். எப்படி வீட்டில் இருக்கக்கூடிய விநாயகருக்கு கண்டிப்பான முறையில் அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்கிறோமோ அதே போல் ஆலயத்தில் இருக்கக்கூடிய விநாயகருக்கும் அருகம்புல்லை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான காரிய தடைகளும் நீங்கும். அதே போல் விநாயகப் பெருமானுக்கு பல வகையான பழங்களை வாங்கி தருவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய நோய்கள் நீங்கும், ஆரோக்கியமான வாழ்க்கை உண்டாகும்.

அடுத்ததாக விநாயகருக்கு தேங்காயை வாங்கித் தருவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மனம் தெளிவாகவும் அமைதியாகவும் இருக்கும். விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு எண்ணெய் வாங்கி தருவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய வினைகளும் நீங்கும். அதே போல் விநாயகருக்கு அலங்காரத்திற்காகவும் அர்ச்சனைக்காகவும் பூக்கள் மற்றும் மாலைகளை வாங்கி தருவதன் மூலம் நமக்கு இருக்க கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -

விநாயகருக்கு நெய்யை வாங்கி தருவதன் மூலம் சொத்து சேரும் யோகம் உண்டாகும். கொழுக்கட்டையை நெய்வேத்தியமாக விநாயகர் ஆலயத்திற்கு தருவதன் மூலம் செல்வத்தடைகள் முற்றிலும் நீங்குவதோடு பண வரவும் அதிகரிக்கும். அபிஷேகத்திற்காக விநாயகருக்கு பால் வாங்கித் தருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் மனக்கசப்புகள் போன்றவை முற்றிலும் நீங்கி ஒற்றுமையான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமானை முழுமனதோடு நம்பி மேல் சொன்ன பொருட்கள் அனைத்தையுமோ அல்லது தங்களால் எதை வாங்கித் தர முடியுமோ அதை முழுமனதோடு வாங்கி தருவதன் மூலம் விநாயகரின் அருளையும் அந்த பொருளுக்குரிய பலனையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்