தீர்க்கவே முடியாத கஷ்டங்களுக்கு கூட ஒரே நாளில் தீர்வு கிடைக்க, அம்மனுக்கு இந்த 1 மாலையை போட்டு வேண்டிக் கொண்டாலே போதும். வேண்டுதல் உடனே நிறைவேறும்.

virali-manjal

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய தீர்க்க முடியாத கஷ்டங்களாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைப்பவள் அந்த அம்பாள் தான். அம்பாளை, சக்தி தேவியை முழுமனதோடு நம்பி வழிபாடு செய்பவர்கள் யாரும் கைவிடப்பட்டது கிடையாது. உலகத்தையே காக்கும் ஆயிரம் கண் படைத்த அம்மன் வழிபாட்டை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை ‘கஷ்டம்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விடுகிறோம். ஆனால் அந்த கஷ்டங்களில் பல வகைகள் இருக்கிறது. பண கஷ்டத்திற்கு ஒரு பரிகாரம், மன கஷ்டத்திற்கு ஒரு பரிகாரம், கடன் பிரச்சினைக்கு ஒரு பரிகாரம், உடல்நிலை சரியில்லாதற்கு ஒரு பரிகாரம், என்று இப்படியாக தனித்தனியாக பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் கூட அம்பாளை வேண்டி இந்த ஒரு பரிகாரத்தை மனநிறைவோடு செய்தாலே போதும். வாழ்வில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

kamatchi-amman

அம்மன் வழிபாடு என்றாலே அதில் மஞ்சள் குங்குமம் எலுமிச்சை பழத்திற்கு அதீத சக்தி உண்டு. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது மஞ்சளை பற்றித்தான். மஞ்சளைக் கொண்டு அம்பாளுக்கு எந்த வேண்டுதலை நாம் செய்தாலும் அதை அம்பாள் மனநிறைவோடு, முழு மனதோடு உடனே ஏற்றுக்கொண்டு வேண்டிய வரங்களை மனம் குளிர்ந்து அள்ளித் தருவாள் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது.

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு இந்த வேண்டுதலை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். வேண்டுதலை வைத்து இந்த மாலையை கட்டிக் கொண்டு போய் போட்டு பாருங்கள். நிச்சயமாக உங்கள் கஷ்டங்கள் விரைவில் தீர்க்கப்படும். அது என்ன மாலை? ‘விரலி மஞ்சள் மாலை’ 11, 21 இப்படியாக ஒற்றைப்படை கணக்கில் விரலி மஞ்சளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

virali-manjal

அந்த விரலி மஞ்சளை பூகட்டுவது போல ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டி மாலையாக கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு அர்ச்சகரிடம் கொடுத்து அணிவிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினையாக இருந்தாலும் தீரும். உங்கள் மனதில் தீர்க்கமுடியாத கவலைகள் ஏதாவது இருந்தாலும், மன குழப்பங்கள் இருந்தாலும், அது உடனடியாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தீராத கடன் பிரச்சனை, உள்ளவர்கள் தீராத பணப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த மாலையை முடிந்தவரை வாராஹி அம்மன் கோவிலுக்கு செலுத்துவது மிகவும் நல்லது. எதிரி தொல்லை உள்ளவர்களும் இப்படியாக மஞ்சள் மாலையை வாராஹி அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் செலுத்தி வழிபாடு செய்து வந்தால் மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

Varahi amman

வெள்ளி செவ்வாய் ஞாயிறு இந்த மூன்று நாட்களில் எந்தக்கிழமையில் உங்களால் முடியுமோ அந்த கிழமைகளில் இந்த மஞ்சள் மாலையை அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனுக்கு சாத்தி உங்கள் பெயரைச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வருவது மிகவும் நல்லது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இப்படி செய்தால் கைமேல் பலன் கிடைக்கும். இத்தனை முறைதான் மஞ்சள் மாலை அம்மனுக்கு சாத்த வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் அம்மன் வழிபாடு செய்து இந்த மாலையை அம்மனுக்கு அணிவித்து வழிபாடு செய்யலாம். ‌நம்பிக்கையுடன் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.