Virat Kohli : தோல்விக்கு காரணம் இதுதான். வேறு எதையும் நான் கூற விரும்பவில்லை – கோலி ஓபன் டாக்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 100 ரன்களை அடித்தார்.

Toss

பிறகு 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி 237 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்து தொடரை கோட்டை விட்டது. இந்த தோல்விக்கு பிறகு தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார்.

- Advertisement -

அதில் கோலி கூறியதாவது : இந்த மைதானத்தில் எட்டவேண்டிய இலக்கு தான் இது ஆனாலும் எங்களால் அதனை எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றே நான் கருதுகிறேன். மேலும், நமது அணி 15 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக கொடுத்துவிட்டனர்.

Rohith

இந்த ஒரு வித்தியாசம் மட்டுமே நம்மிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டதாக நான் கருதுகிறேன். மேலும், உலகக்கோப்பை நெருங்கி வரும் இந்த வேலையில் அணியில் சில மாற்றங்கள் அவசியம் என்றே நான் கருதுகிறேன். தொடர் முழுவதும் வீரர்கள் சிறப்பாகவே ஆடி வந்தனர். தொடர்ச்சியான பல தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இந்த தொடரை இழந்தது வருத்தமளிக்கிறது என்று கூறினார் கோலி.

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -