- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிற்காத பொருட்களை விற்று தரும் பரிகாரம்

விற்காத பொருட்களை விற்று தரும் பரிகாரம்

- Advertisement -

எவ்வளவோ கஷ்டப்பட்டு கடன் வாங்கி முதலீடு செய்து, பொருட்களை கடையில் கொண்டு வந்து வைத்து வியாபாரம் செய்வோம். ஆனால் சில பொருட்கள் எல்லாம் தேங்கி நின்று விட்டால் விற்பனை ஆகவே ஆகாது. பல லட்சம் ரூபாய் அந்த பொருட்களிலேயே முடங்கிப் போகும். உதாரணத்திற்கு நாம் ஒரு வாடிக்கையாளராக வைத்துக் கொள்வோம். நாமே ஒரு கடைக்கு செல்வோம். ஆனால் அந்த கடையில் துணி எல்லாம் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் எடுக்கவே மாட்டோம்.

பக்கத்து கடைக்கு செல்வோம் சுமாராக துணி இருந்தாலும், அந்த கடையிலிருந்து நிறைய பொருட்களை வாங்கி வீட்டிற்கு வருவோம். இது ஏன் என்றே புரியாது. இதற்கு பின்னால் இருப்பது ஒரு விதமான ஈர்ப்பு. ஈர்ப்பு தன்மை எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ, அந்த இடத்தில் தான் நன்றாக வியாபாரம் நடக்கும்.

- Advertisement -

உங்களுடைய வியாபாரத்திலும் இந்த ஈர்ப்பு தன்மையை அதிகப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் பார்த்த உடனேயே உங்கள் கடையில் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம் உங்களுக்காக தான்.

விற்காத பொருட்களை விற்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை தொட்டா சிணுங்கி செடியில் இருக்கும் இலை. தொட்டா சிணுங்கி செடிக்கு வசிய தன்மை அதிகம். ஈர்ப்பு தன்மை அதிகம். அந்த செடி எந்த இடத்தில் இருக்கிறது என்று முதலில் தேடி கண்டுபிடிங்கள். செடியிலிருந்து இலையை நாம் பறிக்க போகின்றோம்.

- Advertisement -

இந்த இலையை பறிப்பது என்பது சுயநலத்திற்காக இல்லை, ஒரு நல்ல விஷயத்திற்காக மட்டும்தான், என்னுடைய கடையில் நல்ல வியாபாரம் நடக்க வேண்டும், அப்படி வியாபாரம் நடந்தால் கடையில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கலாம், என்னுடைய தொழில் நன்றாக விருத்தி அடைந்தால், என்னிடம் வேலை செய்யும் குடும்பம் நிம்மதியாக இருக்கும். அதற்காகத்தான் இந்த செடியில் இருந்து இலையை பறிக்கின்றேன் என்று சொல்லி, செடியை வணங்கி அந்த செடியிடம் அனுமதி பெற்று இலைகளை கொஞ்சமாக பறித்துக் கொள்ளுங்கள்.

இந்த இலைகளைக் கொண்டு வந்து ஒரு தட்டில் பரப்பி நிழலிலேயே உலர வைத்துக் கொள்ளவும். காய்ந்த இலைகளை கையாளியே நுணுக்கலாம். அப்படி இல்லை என்றால் அம்மியில் வைத்து அரைக்கலாம். இடிகளில் போட்டு இடிக்கலாம். இரும்பு பயன்படுத்தக் கூடாது. மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கக் கூடாது. கல்லால் செய்யப்பட்ட பொருட்களின் மூலம் தான் இந்த இலையை தூள் செய்ய வேண்டும்.

- Advertisement -

தூள் செய்த இலையை கொஞ்சமாக பன்னீரில் போட்டு கலந்து இந்த தீர்த்தத்தை கொண்டு போய் கடைகளில் விற்காத பொருட்களின் மேலே தெளிக்க வேண்டும். பொருட்களின் மீது பட்டால் பொருட்கள் வீணாகிவிடும் என்று நினைத்தால், கடையில் மூளை முடுக்குகளில் எல்லாம் தெளித்து விடுங்கள். அந்த பொருட்களை சுற்றிலும் இந்த தீர்த்தத்தை தெளித்து விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை பௌர்ணமி இது போன்ற நாட்களில் செய்வது மிக மிக சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்த்தத்தை தெளித்துவிட்டு மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு வியாபாரத்தை துவங்கி பாருங்கள். நிச்சயம் விற்காத பொருட்கள் விற்கும். சில பேருக்கு வீடு வாகனம் சொத்து இதுபோல ஏதாவது ஒரு பொருள் வைத்திருப்பாங்க.

இதையும் படிக்கலாமே: 28-11-2024 வியாழக்கிழமையில் வந்திருக்கும் பிரதோஷம்.

அந்த பொருட்கள் விற்க வேண்டும் என்றாலும் இதேபோல தீர்த்தத்தை அந்த பொருட்களின் மீது தெளித்து விட்டு, குலதெய்வத்தை பிரார்த்தனை செய்தால் விற்காத பொருட்கள் விற்கும் என்பது நம்பிக்கை. உங்களுக்கும் இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்