2021 புத்தாண்டு பலன்கள் – விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை வருகின்ற 2021-ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெற்றி நடை போடுவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். குறிப்பாக நிலுவையில் இருந்த கடன் தொகைகள் தீரும் யோகமும் உண்டு. உங்கள் ராசிக்கு சனி பகவான் மூன்றாமிடத்தில் அமர்ந்திருப்பார். கேது பகவான் முதல் வீட்டிலும், ராகு 7-வது வீட்டிலும் அமர்ந்திருப்பார்கள். மற்ற கிரகங்கள் பெயர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும். இந்த கிரக நிலையின் அடிப்படையில் உங்களுக்கு உரிய பலன்களை இனி காண்போம்.

viruchigam-rasi

குடும்பம்:
விருச்சிக ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிகப் பற்று உடையவர்களாக இருப்பார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நிறைய சவால்களை எதிர் கொள்வீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோருடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. அடுத்து வரும் காலகட்டத்தில் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பார்கள். உடன்பிறப்புகளோடு இணக்கமாக செல்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்குரிய யோகம் உண்டாகும். அவ்வபோது குடும்பத்தில் குதூகலத்துடன் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஆண்டின் இறுதியில் உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

வியாபாரம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் சனி பகவான் 3-வது இடத்தில் அமர்ந்திருப்பதால் நீங்கள் அதிகம் உழைப்பை கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். உங்களுடன் போட்டி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே சோர்வு ஏற்பட்டாலும், சோம்பலைத் தவிர்த்து உற்சாகத்துடன் நீங்கள் பணி புரிந்தால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும். ஆண்டின் நடுப்பகுதியில் பண ரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது. புதிய முயற்சிகளை அந்நேரத்தில் தள்ளிப் போடுவது உத்தமம். ஆண்டின் இறுதியில் நல்ல அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

office

உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஆண்டின் இறுதியில் அதற்குரிய சாதகமான பலன்களை காணலாம். இடமாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலம் உங்களுக்கு சுமூகமாக செல்லும். அதன் பிறகு ஆண்டின் இறுதியில் நல்ல மாற்றங்களும், அதிர்ஷ்டங்களும் ஏற்படலாம். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் முன்னேற்றம் உண்டாகும்

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் இவ்வாண்டு விருச்சிகம் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரித்தாலும், பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு வர இருக்கும் விரயங்கள் சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.

marraige-couple

பெண்களுக்கு:
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். மே மாதத்தில் சில தேவையில்லாத மன கஷ்டங்களை சந்திக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அக்டோபர் மாதத்திற்கு பின்னர் அதாவது ஆண்டின் இறுதிக்கட்டத்தில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு பலமாக அமையக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள்.

gopuram-2

பரிகாரம்:
குடும்பத்துடன் இறை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தால் மிகவும் நல்லது. வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியமும், தண்ணீரும் வைக்க தோஷங்கள் நீங்கும். உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை குழந்தைகளுக்கு படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்யுங்கள், நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தாண்டு பலன்கள் – துலாம் ராசி

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்