- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவைகாசி விசாகம் அன்று வீட்டில் முருகப்பெருமானுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு.

வைகாசி விசாகம் அன்று வீட்டில் முருகப்பெருமானுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு.

- Advertisement -

முருகப்பெருமான் இந்த பூமியில் அவதாரம் செய்த நாளை தான் வைகாசி விசாகத் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றோம். முருக பக்தர்கள் எல்லோருமே இந்த நாளில் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக அறுவடை வீட்டுக்கு செல்ல வேண்டும்.

திருச்செந்தூர் முருகனை சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் எல்லோராலும் இப்படி பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வது என்பது இயலாத ஒன்று. விசாக நட்சத்திரத்தன்று இப்படி பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது.

- Advertisement -

கூட்ட நெரிசலில் செல்ல முடியாது என்பவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் எல்லோருமே உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் முருகரை வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும். அதுவும் முடியாது என்பவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்யுங்கள். அந்த முருகப்பெருமானின் ஆசி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த வைகாசி விசாகத்தன்று வீட்டில் இருந்தபடியே முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்வது. முருகப்பெருமானின் மனம் குளிர முருகனை வழிபாடு செய்ய ஒரு அற்புதமான வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

முருகப்பெருமானுக்கு பிடித்தமான விளக்கு

நாளைய தினம் வைகாசி விசாக திருநாள் அல்லவா. 22-05-2024 புதன்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, உங்கள் விரதத்தை தொடங்கி விடுங்கள். நாளை முழுவதும் விரதம் இருப்பது உங்களுடைய ஆரோக்கியத்தை பொறுத்தது. வெறும் நீராகாரம் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். அல்லது பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

எதுவுமே சாப்பிடாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்தும் விரதம் இருக்கலாம். அது உங்களுடைய விருப்பம். நாளைய தினம் புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் இருக்கும் முருகனின் உருவப்படத்தை துடைத்து, செவ்வரளி பூக்களை சாற்றி, அலங்காரம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் வேல் இருந்தால் மறக்காமல் அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

- Advertisement -

வேல் இருப்பவர்கள் வீட்டில் நாளைய தினம் பஞ்சாமிர்தம் பிரசாதமாக செய்யணும். பஞ்சாமிரதத்தில் வேலுக்கு அபிஷேகம் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. முருகனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது தேனும் தினைமாவும். இந்த தேன் தினை மாவுடன், கொஞ்சமாக நாட்டு சர்க்கரை சேர்த்து பிசைந்து அதில் மாவிளக்கு தயார் செய்யவும்.

அந்த விளக்குக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு முருகப்பெருமானுக்கு முன்பு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, முருகனிடம் என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். முருகப்பெருமானுக்கு தேனும் திணைமாவும் ரொம்ப பிடிக்கும். அதியிலேயே நீங்கள் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வழிபாடு செய்யும்போது, இந்த வைகாசி விசாக திருநாளில் முருகனின் அளவில்லா ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுவிடுவீர்கள்.

இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, முருகப் பெருமானுக்கு முன்பாக அமர்ந்து ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற மந்திர கோஷத்தை எழுப்பி வழிபாடு செய்தால், முருகன் மனசு மேலும் மேலும் சந்தோஷப்படும். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

முருகப்பெருமானுக்கு பிரசாதமாக வைத்த அந்த விளக்கு மலை ஏறியதும், அதை பிரசாதமாக கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் கொடுக்கலாம். அந்த தேனும் தினை மாவு சேர்ந்த மாவிளக்கு பிரசாதத்தை அனைவரும் உண்ணலாம் தவறு கிடையாது. அப்படி இல்லையென்றால் அந்த மாவிளக்கை பசு மாட்டிற்கு கொடுத்தாலும் ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: வைகாசி விசாக வழிபாடு

இந்த வைகாசி விசாகத்தில், இந்த விளக்கை ஏற்றி முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதல் அடுத்த வைகாசி விசாகத்திற்குள் நிறைவேறி இருக்கும் என்பதும் நம்பிக்கை. உங்களுடைய தீராத துன்பத்தை தீர்க்க இந்த முருகன் வழிபாடும் வழி வகுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்