ரஷ்ய நாடு முழுவதும் இந்துக்கள் வாழ்ந்த ஆதாரத்தை கூறும் விஷ்ணு சிலை – அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு

Vishnu-1
- Advertisement -

தற்போது உலகம் முழுக்க பல மதங்கள் இருக்கின்றன. அம்மதங்களைப் பின்பற்றுபவர்கள் நூற்றுக்கணக்கிலிருந்து நூறுகோடிகளான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இதில் இப்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் மதங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே “வேத கால” மதமான “சனாதன தர்மமாகிய” “இந்து மதம்” உலகெல்லாம் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டுள்ளதற்கு சமீப காலங்களில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அப்படிப்பட்ட ஆதாரத்துடன் கூடிய ஒரு கண்டுபிடிப்பை பற்றிய செய்தி தான் இது.

Lord vishnu

சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய நாட்டின் “வோல்கா” நதி ஓடும் “உல்யனாவ்ஸ்க்” மாகாணத்தின் “ஸ்தரயா மைன்ய” என்ற கிராமத்தில் அந்த உல்யனாவ்ஸ்க் நகர பல்கலைக்கழக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு மிகப்பழமையான, ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட ஹிந்து மதக் கடவுளான “மஹாவிஷ்ணுவின்” சிலைக் கிடைத்தது. அச்சிலையைப் பற்றி சில காலம் நன்கு ஆராய்ந்தனர் அப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

- Advertisement -

இந்த ஆய்வுகளையெல்லாம் முடித்த பின்பு அந்த உல்யனாவ்ஸ்க் பல்கலைக் கழக தலைமை சரித்திர பேராசிரியர் முனைவர் “அலெக்சாண்டர் கொஸேவின்” கூறும்போது, இந்த விஷ்ணுவின் சிலை கி.பி 8 லிருந்து 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்றும், அந்த காலகட்டத்தில் இந்த உல்யனாவ்ஸ்க் பகுதி ரஷ்ய நாட்டிலேயே மிகுந்த மக்கள் தொகை கொண்டதாகவும் அது போல இப்பகுதி ரஷ்ய நாட்டின் மிகப் பழமையான ஊராகவும் இருந்தாகவும் கூறுகிறார். எனவே இந்த நாட்டில் ஆட்சியாளர்களால் கிறிஸ்துவ மதம் பரப்பப்படுவதற்கு முன்பாக வேத கால மதமான “ஹிந்து மதம்” இங்கிருந்திருக்க கூடிய சாத்தியக் கூறை இந்த சிலையின் கண்டுபிடிப்பு காட்டுவதாக கூறுகிறார்.

இப்பகுதியில் ஓடும் வோல்கா நதியின் கிளை நதியான “ஸமாரா” நதிக் கரையோரங்களில் தாங்கள் அகழ்வாய்வில் ஈடுபட்ட போது மேலும் பல இந்து மதம் சம்பந்தமான சிலைகள், நாணயங்கள் அணிகலன்களைக் கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார். இதையெல்லாம் கண்ட பின் இந்தியாவுக்கும் பண்டைக் கால ரஷ்யாவிற்கும் இருக்கும் தொடர்புகளைப் பற்றி அப்பல்கலைக்கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கைலாய மலையை ஏறுவோர்கள் இளம் வயதிலேயே முதுமை அடையும் மர்மம்

English Overview:
In one of the excavation happened in Russia there was one Vishnu idole found and it is age is about 10,000 AD. This proves that Hindus lived in Russia long back.

- Advertisement -