சிவன் கோவிலாய் மாறிய விஷ்ணு கோவில்.

sivan-1

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தபோது உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் சிவ பெருமானின் திருமணத்தை காண கைலாயம் நோக்கி சென்றனர் இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம். இதனை சரி செய்வதற்காக அகத்திய மாமுனிவர் பூமியின் தென்பகுதிக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்தினார் என்று புராணங்கள் கூறுகின்றன.

அப்படி அகத்தியர் தென் பகுதி நோக்கி நடந்துவந்தபோது குற்றாலத்தில் ஒரு விஷ்ணு கோவிலை கண்டாராம். அந்த கோவிலை அவர் சிவன் கோவிலாக மாற்ற ஆசை பட்டு பின்பு அதை சிவன் கோவிலாகவே மாற்றிவிட்டாராம்.

அகத்தியரால் மாற்றப்பட்ட அந்த கோவில் தான் குற்றாலத்தின் பெரிய அருவி அருகே உள்ள திருகுற்றாலநாதர் கோவில். தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் 14 சிவாலயங்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கோவில்களை போல் சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ இல்லாமல் இந்த கோவில் சங்கு வடிவில் இருப்பது இதன் தனி சிறப்பு.