வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட தினமும் 1 டம்ளர் தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் இப்படி வையுங்கள்.

water
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்குமே வியாபாரம் என்பது மந்தமான நிலையில்தான் உள்ளது. காரணம் நோய் தொற்று பிரச்சினை, ஊரடங்கு பிரச்சனை. இந்த சூழ்நிலையில் நம்முடைய வியாபாரத்திற்காக கொடுக்கப்படும் நேரமே மிகவும் குறைவான நேரம் தான். அந்த சமயத்தில் அதிகப்படியான லாபத்தை எதிர்பார்ப்பது என்பது முடியாத காரியம். இருப்பினும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

viyabaram

அதாவது வியாபாரத்தில் இன்றைய சூழ்நிலையில் முன்னேற்றம் அடைய முடியவில்லை என்றாலும் கையில் இருப்பதை இழக்காமல் இருக்க வேண்டும் அல்லவா? அதற்காக சில பரிகார முறைகளை செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. நம்பிக்கையோடு உங்களுடைய வியாபாரத்தை, நீங்கள் செய்யும் தொழிலை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

தினமும் காலையில் தொழில் செய்யும் இடத்திற்கு சென்றவுடன் முதலில் இதை செய்துவிட்டு அதன் பின்பு வேலையை தொடங்குங்கள். ஒரு சிறிய கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி கல் உப்பை போட்டு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தொழில் செய்யும் இடத்தில் இருக்கக் கூடிய சுவாமி படத்திற்கு முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வையுங்கள்.

virali-manjal

விரலி மஞ்சளை பூஜைக்காக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விரலி மஞ்சளை எடுத்து நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச் சுடரின் ஒளியில் காண்பிக்க வேண்டும். நெருப்பில் வைத்து விடாதீர்கள் தீபச் சுடரின் இருக்கும் அனலில் இலேசாக மஞ்சளை காட்டிவிட்டு, இந்த மஞ்சளை கண்ணாடி தம்ளரில் தயாராக இருக்கும் அந்த உப்பு தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த டம்ப்ளரை நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் டேபிளின் மீது எல்லோர் கண்களுக்கும் படும்படி வைத்து விடலாம். காலை இதை தயார் செய்து வைத்துவிட்டு மனதார இறைவனிடம் உங்களுடைய தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். மறுநாள் காலை வந்தவுடன் டம்ளரில் இருக்கும் மஞ்சளை மட்டும் எடுத்து தனியாக வைத்துவிட்டு, அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை வெளியே கொட்டி விட வேண்டும்.

Thozhil

மஞ்சளை நல்ல தண்ணீரில் ஒரு முறை கழுவி மீண்டும் மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து, இதேபோல் அந்த டம்ப்ளரை தயார் செய்து மேஜை மீது வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சளை 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொள்ளுங்கள். பழைய மஞ்சள் கிழங்கை செடி கொடிகளில் போட்டு விடலாம். இப்படி தொடர்ந்து செய்து வர உங்களுடைய வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றத்தை உணர்வீர்கள். கோடிக்கணக்கில் லாபத்தை இந்த பரிகாரம் உங்களுக்கு கொட்டிக் கொடுக்குமா என்பது தெரியாது. ஆனால் வரக்கூடிய நஷ்டத்தில் இருந்து கட்டாயம் இந்த பரிகாரம் உங்களை காக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -