உங்கள் தொழில், வியாபாரம் வளரவில்லையா? அப்போ நீங்க இந்த 7 வழிகளை பின்பற்றவில்லை என்று தான் அர்த்தம்.

Thozhil

தொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்வது உங்களின் கடமை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. பிறரை ஏமாற்ற நினைக்கக் கூடாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் இந்த தாரக மந்திரத்தை முன் நிறுத்தி தான் தங்கள் வளர்ச்சியை காண்கிறார்கள். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெறவே நீங்கள் விரும்புகிறீர்கள். எனினும் சில விஷயங்களில் சாதூர்யமாக இல்லாமல் போனால் உங்களின் வளர்ச்சி தடைபட்டுவிடும். சிறு சிறு விஷயங்களில் கவனமாக இருந்தால் வியாபாரம் நன்றாக வளரும். சாணக்கியரை பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. அவர் சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர். தொழில், வியாபாரம் சிறக்க சாணக்கியர் இந்த 7 விஷயங்களை பின்பற்றினால் போதும் என்கிறார். அவர் அப்படி என்ன தான் கூறுகிறார் என்று பார்ப்போமா?

viyabaram

1. முதலாவதாக அவர் கூறுவது வள்ளுவர் கூறிய, ‘நாவடக்கம்’. ஒரு ஊரில் இரண்டு வியாபாரிகள் இருக்கின்றனர். அதில் ஒருவரிடம் தரமான பொருள் விற்பனைக்கு உள்ளது. இன்னொருவரிடம் தரம் குறைவாக உள்ளது. எனினும் தரமான பொருளை விற்பவரின் வாடிக்கையாளர்கள் குறைவாக உள்ளனர். ஏன்? ஏனெனில் அவரிடம் நாவடக்கம் இல்லாததே அதற்கு காரணமாக இருந்தது. அவர் எப்போதும் வாடிக்கையாளர்கள் முன்னே கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார். ஆனால் தரம் குறைந்த பொருளை விற்பனை செய்தாலும், அவரின் இனிமையான பேச்சால் வியாபாரம் செழித்து வளர்ந்தது. எனவே பேச்சில் கண்ணியமும், இனிமையும் தேவை என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. வியாபாரம் செய்யும் இடத்தில் கெட்ட சொற்கள் பேசினால் அங்கே உங்களின் அழிவு பாதை ஆரம்பிக்கும்.

2. உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். வியாபாரத்தில் அல்லது தொழிலில் ஒன்று லாபம் ஈட்ட வேண்டும் அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சாணக்கியர் சிறிதும் சிந்திக்காமல் நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற பாருங்கள் என்கிறார். இதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. மக்களிடையே நம்பிக்கையை பெறுவதற்கு சில நஷ்டங்களையும் சந்திக்க நேரிடலாம். இதனால் நீங்கள் பாதிப்படைந்தாலும் இதன் மூலம் வளர்ச்சியை காணும் சூட்சம வழிமுறையும் உள்ளது.

money

3. தொழில் மற்றும் வியாபாரத்தில் நேர்மை அவசியம் தான். ஆனால் அதிக நேர்மையுடன் இருந்தாலும் நீங்கள் பாதிப்படைவீர்கள். நீங்கள் முடிவெடுக்கும் சூழ்நிலை ஏற்படும் பொழுது, உங்கள் புத்தியையும், வியாபார யுக்தியையும் கையாள்வது அவசியமாகும் என்கிறார் சாணக்கியர்.

- Advertisement -

4. இது போட்டி, பொறாமை நிறைந்த உலகம். ஒருவரைக் கீழே தள்ளிவிட்டு அவர்கள் மேல் ஏறி நின்று ஜெய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு ரகசியம் கட்டாயம் இருக்கும். தங்களுக்கென பிரத்தியேக வழிமுறைகளைப் பயன்படுத்தி தான் அவர்கள் முன்னிலையில் இருப்பார்கள். எனவே உங்களுடைய ரகசியங்களை மிகவும் நம்பிக்கையானவர்கள் இடத்திலும் எப்போதும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது தொழில் வளர்ச்சிக்கு நன்மை தரும்.

Ragasiyam

5. உங்களுடன் இருக்கும் நபர்களை கவனியுங்கள். உங்களுடன் இருப்பவர்கள் எவரேனும் எதிர்மறை எண்ணங்களை கொண்டு இருந்தால் அவர்களிடமிருந்து தள்ளியே இருங்கள். எந்த விஷயத்திலும் குறை கண்டுபிடிப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள். இது உங்களின் சிந்தனையை சீர்குலைக்கும். எப்போதும் உங்களுடன் நேர்மறையாக பேசுபவர்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

6. உங்கள் வியாபாரம் அல்லது தொழிலில் நீங்கள் வளர்ச்சியை காண வேண்டுமென்றால், கட்டாயம் உங்களுக்கு பலதரப்பட்ட மனிதர்களின் குண நலன்களை கணிக்கும் ஆற்றல் வேண்டும். உங்கள் தொழிலில் பங்கு கொள்ளும் நபர், எப்படிப்பட்டவர் என்பதை பொறுத்தே நீங்கள் அவரிடம் பழக வேண்டும். அந்த நபர் முட்டாளாக இருந்தால் அதற்கேற்றார் போலும், புத்திசாலியாக இருந்தால் நீங்கள் உண்மையையும் கூறியும் தொழில் புரிய வேண்டும். அனைவரிடத்திலும் உண்மையை கூறுவதில் பயனில்லை.

Thozhil

7. சில விஷயங்கள் உங்களுக்கு தெரியாவிட்டால் அதற்காக வெட்கப்பட தேவையில்லை. யாரிடமும் வெட்கப்படாமல் கற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் பண பரிவர்த்தனை செய்யும் போதும், சாப்பிடும் போதும் வெட்கப்பட கூடாது என்கிறார் சாணக்கியர். இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் உங்கள் வியாபாரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறவிட்டு இருக்கிறீர்களா? என்று ஆராய்ந்து பாருங்கள். அதுவே உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் விஷயமாகும்.