காலையில் எழுந்ததும் நீங்க இதெல்லாம் செய்வீங்களா? செய்யலைன்னா! நீங்க வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டம் தான் பாத்துக்கங்க!

bath-wakeup

ஒரு சில விஷயங்கள் எல்லாம் கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டிய ஒன்றாக இருக்கும். ஆனால் அதை யாராலும் சரியாக கடைபிடிக்க முடியாது. அதற்கு முதல் காரணம் சோம்பேறித்தனமாக இருக்கும். சோம்பேறித்தனமாக இருக்கும் ஒரு நபர் வெற்றி பெறுவது என்பது கொஞ்சம் கஷ்டம் தானே? வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பானவர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அந்த வகையில் காலையில் எழுந்ததும் நீங்க இதையெல்லாம் செய்வீர்கள் என்றால் நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்பது தான் உண்மை. அப்படி காலையில் எழுந்ததும் என்ன தான் செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sleep

காலையில் எழுந்ததும் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விட இதையெல்லாம் செய்யவே கூடாது என்பது தான் சரியாக இருக்கும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்யும் ஒரு வேலை என்ன என்று கேட்டால்? அனைவரின் பதிலும் ‘பல் தேய்ப்பது’ என்று தான் இருக்கும். ஆனால் அது தான் இல்லை. காலையில் விழித்துக் கொள்வதற்கு முன்பே நாம் செய்யும் முதல் வேலை விர்ரென அடிக்கும் அலாரத்தை ஆஃப் செய்வது தான்.

பத்து நிமிட இடைவெளி விட்டு மீண்டும் அலாரம் அடிக்கும் பொழுது எழுந்து இருப்போமா? என்றால் அதுவும் இல்லை. மீண்டும் பொத்தானை அழுத்தி விட்டு உறங்கி விடுவோம். இது காலையில் எழுந்ததும் செய்யவே கூடாத விஷயமாக கூறுகிறார்கள். இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு முறையும் பட்டனை அழுத்தி விட்டு தூங்கும் பொழுது உங்களின் தூக்க நிலை நிலைகுலைந்து சரியாக இருக்காது. இதனால் அன்றைய நாள் முழுக்க உங்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போகலாம்.

sleep1

அடுத்ததாக காலையில் எழுந்ததும் சூரிய வெளிச்சத்தை பார்க்க வேண்டும். அதற்காகவே எல்லா ஜன்னல் கதவுகளின் திரைகளையும் நீக்கி விட்டு படுப்பது நல்லது. திரைகள் மூடப்பட்டு இருந்தால் இன்னும் விடியவில்லை என்ற எண்ணத்துடனேயே சற்று அதிக நேரம் உறங்குபவர்கள் நிறைய உண்டு.

- Advertisement -

விழித்த பிறகு வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காபி கட்டாயம் குடிக்கக் கூடாது. பல் தேய்த்து முடித்ததும் முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை அருந்த வேண்டும். நீங்கள் அருந்தும் தண்ணீர் சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ கட்டாயம் இருக்கக் கூடாது. சாதாரண தண்ணீராக இருக்க வேண்டும். எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பல விதமான பிரச்சினைகள் தீரும். இதுவும் அன்றைய நாள் முழுக்க உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

water drink

காலையில் எழுந்ததும் சுடு தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கூடாது. காலையில் எழுந்ததும் சுடு தண்ணீரில் குளித்தால் தசைகள் தளர்ந்து ரிலாக்ஸாகி தூக்க நிலைக்கு சென்று விடுவோம். இது அன்றைய நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளாது. அதனால் இனிமே காலையில் எழுந்ததும் பச்சைத் தண்ணீரில் குளிப்பது தான் உங்களுக்கு நல்லது தெரிஞ்சிகோங்க.

thiyanam-mantra

அடுத்ததாக காலையில் எழுந்ததும் உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உச்சரிப்பது நேர்மறை எண்ணங்களை தூண்டுவதற்கு உதவியாக இருக்குமாம். ஒரு நாள் முழுக்க நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவில் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்பது, அன்றைய நாள் முழுக்க உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கு உதவும்.

yoga 5-compressed

மாலையில் உடற்பயிற்சி செய்பவர்களை விட காலையில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அதிக திறமைகள் இருக்குமாம். எழுந்ததும் சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் மூழ்கி விடுவார்கள். இதை கட்டாயம் செய்யவே கூடாது. உங்களுடைய அன்றாட பணிகளை எல்லாம் முடித்து விட்டு காலை உணவை எடுத்துக் கொண்ட பின் இந்த வேலையை நீங்கள் செய்யலாம். அதற்கு முன் நீங்கள் செய்வது அதில் இருக்கும் ஏதோ ஒரு விஷயம் உங்களை அன்றைய நாள் முழுக்க உற்சாகமாக வைத்துக் கொள்ளாது தடுக்கும் என்கிறது சர்வே. ஏதோ ஒரு பதற்றம் இருக்குமாம்.

mobile-searching

ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருந்தால் தான் நம்மால் எதையும் தெளிவாக சிந்திக்க முடியும். நல்லது எது? கெட்டது எது? என்று பகுத்தறிய முடியும். அதற்கு உடலில் சோர்வு இருக்கக் கூடாது. இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யாமல் இருந்தாலே உங்களுக்கு உற்சாகம் உடலிலும், மனதிலும் தானாக பிறக்கும். அப்பறம் என்னங்க! அடுத்த வெற்றியாளர்களில், நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே
செம்பருத்தி செடி, தக்காளி செடி போன்ற செடிகள் பூக்கும் நேரத்தில் நிறைய பூக்களையும், பழங்களையும் தர இந்த 2 பொருள் ஒன்றாக கலந்து ஊற்றுங்கள் போதும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.