வேண்டியதெல்லாம் நடக்க வேண்டுமா? கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டுமா? இந்த 1 பரிகாரம் போதும்.

நம்முடைய மனதில் நினைத்த காரியமானது விரைவில் நிறைவேற வேண்டும் என்பது தான் எல்லோருடைய கனவாகவே இருக்கும். இறைவனிடம் வேண்டி, கேட்பதெல்லாம் நமக்கும் கிடைக்கவில்லை. நமக்கு கிடைத்ததெல்லாம் நாம் வேண்டியதும் இல்லை. இப்படி இருக்க யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பது அந்த இறைவனுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா? இருப்பினும் நாம் இறைவனிடம் கேட்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. இது மனிதனின் இயல்பு. இப்படி இருக்க, வேண்டிய வரத்தையும், நினைத்த காரியத்தையும் எப்படித்தான் சாதித்துக் கொள்வது? மனிதன், இறைவனிடம் இருந்து, வேண்டிய வரத்தை விரைவில் பெறுவதற்கு நம்முடைய முன்னோர்கள் ஒரு சூட்சும பரிகாரத்தையும் நமக்காக சொல்லித்தான் இருக்கிறார்கள்.

money bag

வேண்டியதெல்லாம் நமக்கு கிடைக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு, நம்முடைய தகுதிக்கு மீறியோ அல்லது நடக்காத ஒரு காரியத்தையோ வேண்டிக்கொண்டு, அது பலிக்கிறதா? என்றெல்லாம் சோதித்துப் பார்க்கக்கூடாது. நீங்கள் வேண்டுவது உங்கள் தகுதிக்கு உட்பட்டதாகவும், நடக்கக் கூடிய காரியமாகவும் தான் இருக்க வேண்டும். நாளையே என் கைகளில் ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பரிகாரத்தை செய்தால் அது கட்டாயம் பலிக்காது. மனத்தூய்மை, எண்ணத் தூய்மை உடையவர்கள், உண்மையான பக்தியோடு உங்களது பிரார்த்தனையை இந்த முறைப்படி வைத்து பாருங்கள் கட்டாயம் நடக்கும்.

வன்னி மரம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு மரம்தான். பழமை வாய்ந்த எல்லா சிவன் கோவில்களிலும் இந்த மரம் கட்டாயம் இருக்கும். எந்த சிவன் கோவிலில் இந்த வன்னி மரம் இருக்கிறதோ அல்லது வேறு எந்த கோவில்களில் இருந்தாலும் சரி. அந்த கோவிலுக்கு சென்று, அந்த இறைவனை முழுமையாக, முறையாக வழிபட்டு விட்டு, வீடு திரும்பும் போது வன்னிமரம் முன்பு சென்று, முதலில் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். கீழே விழுந்து நமஸ்காரம் செய்து, ‘என் மனதில் வைத்திருக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற என்னை வாழ்த்த வேண்டும் என்றவாறு’ முதலில் நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்.

vanni-tree

அதன் பின்பு உங்களது இரு கரங்களாலும் வன்னிமரத்தை பற்றிக் கொண்டு, உங்கள் நெற்றி, வன்னி மரத்தின் மீது படும்படி வைத்துக் கொள்ள வேண்டும். வன்னி மரத்தை பற்றி கொண்டபடியே இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

“ஓம் பிறங் பிறங் குசாய சிங் சிவாய நம”

ஏதாவது ஒரு கோரிக்கையை மனதார நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து, வன்னி மரத்தின் ஆசியை நாம் முழுமையாக பெற்று விட்டோமேயானால், நாம் நினைத்த காரியம் கட்டாயம் வெற்றிதான். ஆனால் நினைத்த காரியம் ஆனது நிறைவேற உங்களது முயற்சிகளும் மிக மிக அவசியம்.

vanni tree

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், ஆசைக்கு எந்தவிதமான பஞ்சமும் இல்லை. ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்வதில் சில தாமதங்கள் ஏற்படுகிறது. ஏனென்றால், அதற்கு நம்முடைய கர்ம வினைகள் தான் காரணம். இந்தக் கர்ம வினையை நீக்கக்கூடிய சக்தியானது இந்த வன்னி மரத்திற்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
பணம் உங்கள் கையில் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களைத் தேடி வரும் சூட்சமம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vanni maram benefits in Tamil. Vanni maram. Vanni maram Tamil. Vanni maram temple. Vanni maram valipadu.