7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்

nandhil
- Advertisement -

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

nandhi

கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்”. கிட்டதட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது.

- Advertisement -

பொதுவாக எல்லா கோவில்களிலும் நந்தி தேவரின் சிலை சிவ லிங்கத்திற்கு எதிராக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்ட்டுள்ளது.

நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எப்போதும் சிவ லிங்கத்தின் மீது படும்படி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

- Advertisement -

nandhi with sivan

இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாவதும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சிவபெருமானை அபிஷேகித்த பிறகு இந்த தீர்த்தம் எதிரில் உள்ள கோவில் குளத்தில் கலக்கிறது. நிற்காமல் கொட்டிக் கொண்டிருக்கும் இந்த நீரினால் இந்த குளத்தின் நீர் மட்டம் ஆனது ஒரு அளவிற்கு மேல் இதுவரை உயரவில்லை. இந்தக் கோவில் பதினாறாம் நூற்றாண்டில் வீர சிவாஜியின் சகோதரரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

மல்லேஸ்வரத்தில் உள்ள கோவிலைப் போலவே மற்றொரு இடத்திலும் நந்தியின் வாயிலிருந்து தண்ணீர் நிற்காமல் ஊற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் நந்தியின் மேல் பகுதியில் சிவன் அமர்ந்திருக்கிறார். நந்தியின் வாயிலிருந்து வரும் நீரானது ஒரு தெப்பக்குளத்தில் விழுகிறது. இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் ராம கிரி என்ற மலையில் உற்பத்தியாகும் நீர்தான் இந்த நந்தியின் வாயிலிருந்து விழும்படி, ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்கள் கட்டியிருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. இது ஒரு சிவன் கோவில். ஆனால் இங்கு ஒரு தனி சந்நிதியில் நாய் வாகனத்தோடு காலபைரவர் இருக்கின்றார்.

ராவணனை கொன்றதற்கான பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ஆஞ்சநேயர் காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்தார். அந்த லிங்கத்தை காலபைரவர் ஒரு நாடகம் ஆடி இங்கேயே இருக்கும் படி செய்தார். அந்த லிங்கம் இங்கு வாலீஸ்வரர் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. இந்த கோவிலில்தான் சிவனுக்கும் நந்திக்கும் இடையே ஆஞ்சநேயர் அமைந்துள்ளார். இந்த சிறப்பை வேறு எந்த கோயிலிலும் காணமுடியாது.

Nandi-Tirtha

சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் ஊத்துக்கோட்டை வழியில் ராமகிரி என்ற இடம் உள்ளது. அந்த கிராமத்தின் அருகே உள்ள ஒரு கோவில் தான் ராமகிரி வாலீஸ்வரர் என்ற கோயில். வித்தியாசமாக காணப்படும் இந்த இரண்டு கோவில்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த கோயிலைப் பார்த்து விட வேண்டும் என்ற வரிசையில் இந்த கோவில்களும் அடங்கும்.

- Advertisement -