தர்பூசணி விதைகளை செடிகளுக்கு உரமாக்கினால் இவ்வளவு பயன்களா? இனி ஒரு விதையை கூட வீணாக்க மாட்டாங்க!

water-melon-seeds-plants
- Advertisement -

தர்பூசணியில் அதிக நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. அவற்றின் விதைகளில் மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இவற்றை செடி, கொடிகளுக்கு உரமாக கொடுத்தால் அவற்றில் இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் வெகு விரைவாக தீரும். செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவது, பூக்கள் மொட்டுக்கள் விடுவதில் இருக்கும் பிரச்சனைகள், இலைக்கருகல், நோய் தாக்குதல்கள் அத்தனையும் நிவர்த்தியாகி செடிகள் பசுமையாக, செழிப்புடன் வளர உதவி செய்யும். அதை எப்படி முறையாக கொடுப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

water-melon-seeds

தர்பூசணியில் இருக்கும் விதைகளை சேகரித்து தண்ணீரில் ஒரு முறை அலசி கொள்ளுங்கள். அதில் இருக்கும் இனிப்புச் சத்து போக வெயிலில் நான்கு நாட்களுக்கு நன்கு காய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து அல்லது அப்படியே கூட நாம் செடிகளுக்கு உரமாக கொடுக்கலாம்.

- Advertisement -

மல்லி, முல்லை, இருவாட்சி, சாமந்தி, நித்தியமல்லி போன்ற அதிக பூக்களைக் கொடுக்கும் செடிகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாக இவ்விதைகள் நிச்சயம் இருக்கும். இந்த வகை செடிகளில் ஒருமுறை மொட்டுக்கள் துளிர்த்து பூக்கள் பூத்ததும், பூக்களை பறித்து இடத்தை வெட்டி விட வேண்டும். அப்போது தான் பக்க கிளைகள் வளர்ந்து புதிய மொட்டுகள் துளிர்க்கும். பெரும்பாலும் இதனை செய்ய தவிர்ப்பதால் மொட்டுக்கள் துளிர்ப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மல்லி செடியை பொறுத்தவரை எந்த அளவிற்கு நீங்கள் வெட்டிவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு நிறைய பூக்களை கொடுக்கும்.

water-melon-seed-powder

அரைத்து வைத்துள்ள தர்பூசணி விதைகள் 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து எல்லா வகையான செடிகளுக்கும் இலை முதல் வேர் வரை தெளித்து விடலாம். காய்கறி செடிகளுக்கு இந்த தண்ணீரை தெளிப்பதால் காய்கறிகள் நன்கு பச்சை பசேலென காய்க்க ஆரம்பிக்கும். பூச்சிகள் தொந்தரவுகள் இல்லாமல் இருக்க ஒரு டீஸ்பூன் இந்த விதை பவுடருடன், ஒரு டீஸ்பூன் வேப்பம் புண்ணாக்கு அல்லது சாம்பல் கலந்து வேரை சுற்றியுள்ள மணலில் தூவி கிளறி விட வேண்டும். எந்த ஒரு உரத்தைக் கொடுக்கும் பொழுதும் செடிகள் உடைய வேர் கால்களுக்கு சுற்றிலும் கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதனால் வேர்களுக்கு அடிபடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

செடிகளில் இலைகள் மஞ்சள் நிறத்துடன் மாறுவதற்கு பொட்டாசியம் சத்து குறைவது காரணமாகும். இதற்கு இவ்விதைகள் நல்ல தூண்டுகோலாக இருக்கும் இப்படி உரம் கொடுக்க முடியாதவர்கள். வாழைப்பழ தோலை உலர வைத்து பொடியாக்கி அதனையும் கொடுக்கலாம், அதில் இருக்கும் பொட்டாசியம் சத்துக்கள் உங்கள் இலைகளின் பச்சை நிறத்தை மீட்டுக் கொடுக்கும்.

mint-puthina-plant

இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து நாம் உரமாக்கி கொடுக்கும் பொழுது தினமும் கொடுக்கக்கூடாது. வாரம் ஒருமுறை ஒரு ஸ்பூன் வீதம் கொடுத்து வந்தால் கூட போதும், செடிகள் பசுமையாக வளரத் துவங்கும். புதினா செடிகளுக்கு இந்த உரத்தை கொடுத்து வந்தால் இலைகள் சேதமின்றி பெரிது பெரிதாக பச்சை பசேலென துளிர்க்கும். கோடை காலத்தில் குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இப்படியான இயற்கை உரங்களைக் கொடுத்து தேவையான நீர் சத்து கிடைக்கச் செய்தால் செடிகள் வாடாமல், புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

- Advertisement -