Whatsapp : வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மைலி – திருநங்கைகள் உற்சாகம்

Whatsapp
- Advertisement -

வாட்ஸ்அப் செயலி வெளியாகி இந்த ஆண்டோடு 10 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகிறது. இந்த செயலிக்கு உலக அளவில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு மிகவும் எளிமையாகவும், இலவசமாகவும் இந்த செயலி மூலம் மற்றவர்களுக்கு குறுந்தகவல்கள், புகைப்படம், பாடல்கள் மற்றும் வீடியோ என பலவற்றையும் அனுப்பமுடியும். மேலும், இந்த செயலி மூலம் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் ஆகிய எந்த இடத்தில இருந்தாலும் எளிமையாக செய்ய முடியும்.

watsap

தற்போது இந்த வாட்ஸ்அப்பில் மேலும் ஒரு வசதி சேர்க்கப்பட உள்ளது. அதுயாதெனில், வழக்கமாக நாம் அனைவரும் இந்த செயலி மூலம் ஸ்மைலி அனுப்புகிறோம். இதன்மூலம் டெக்ஸ்ட் மெசேஜ் டைப் செய்வதற்கு பதிலாக எளிதாக நமது நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கிறம். இந்த ஸ்மைலி இப்போது நிறைய உள்ளது. இருப்பினும் இதில் மேலும் கூடுதலாக சில ஸ்மைலிகளை சேர்க்க வாட்ஸ்அப் தீவிரபணிக்கு பிறகு தற்போது அதனை தயாரித்து விட்டது.

- Advertisement -

இந்த புதிய ஸ்மைலியில் ஆண், பெண் மற்றுமின்றி திருநங்கைகளுக்கு ஆதரவு தரும் வகையில் திருநங்கைகளை பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்காக ஒரு கொடி போன்ற ஸ்மைலியம் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து ஸ்மைலிகளும் பல வடிவங்களிலும் நிறங்களிலும் என பலவற்றை கூடுதலாக வாட்ஸ்அப் நிறுவனம் இணைத்துள்ளது.

watsapp

சமூக வலைதளத்தின் சிறந்த தகவல் பரிமாற்ற கருவியாக இருக்கும் வாட்ஸ்அப் செயலியில் தங்களுக்கும் இடம் அளித்ததை நினைத்து திருநங்கைகள் இந்த கூடுதல் வசதிக்கு தங்களது மகிழ்ச்சியினையும் வரவேற்பினையும் தெரிவித்துள்ளனர். இந்த வசதிகளை கூடிய விரைவில் ஒரு விழாவினை அமைத்து அதன்மூலம் வெளியிட வாட்ஸ்அப் நிறுவனம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -