Whatsapp : 10 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் வாட்ஸ்அப் . சிக்கலின்றி இதனை பயன்படுத்த இதோ 5 எளிய வழிகள்

Whatsapp
- Advertisement -

வாட்ஸ்அப் செயலி கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகியது. ஆண்ட்ராய்டு செயலி மூலம் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் நமது குறுந்தகவல்கள் (மெசேஜ்) எளிதாகவும் இலவசமாகவும் இணையத்தின் உதவி மூலம் அனுப்புமாறு வடிவமைக்கப்பட்டது. இத அப்ளிகேஷன் இந்தியா மற்றுமின்றி உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களுடன் இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இதுகுறித்த உங்களுக்கு தெரியாத 5 முக்கிய தகவல்களை இந்த பதிவில் தெரிவிக்க உள்ளோம். நிச்சயம் இது தெரியாதவர்களுக்கு பயனளிக்கும்.

watsapp

இந்த வாட்ஸ்அப் செயலிகளில் சில அசவுகரியமான விடயங்களுக்கு எளிதான தீர்வே இந்த பதிவு. இதன்,மூலம் சில பிரச்சனைகளை தவிர்த்து நீங்கள் எளிமையாக உங்களது உரையாடல்களை உங்கள் நண்பர்களிடம் வைத்துக்கொள்ள உதுவுகிறது.

- Advertisement -

1. Hide Last Seen : கடைசியாக நீங்கள் வாட்ஸ்அப் உபயோகித்த டைம் நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்துள்ள நம்பர்களுக்கு நிச்சயம் காண்பிக்கும். சில முறை உங்களது நண்பர்களின் மூலம் இது ஒரு தொல்லையாக இருந்திருக்கலாம். வாட்ஸ்அப் பாத்துவிட்டு எனக்கு மெசேஜ் செய்யவில்லையா என்று கேட்டு கூட பலரும் சண்டையிட்டு உள்ளனர். இதனை நீங்கள் சமாளிக்க உங்களது லாஸ்ட் சீன் நேரத்தை மறைக்க முடியும்.

அதற்கான வழிமுறை : Watsapp Settings : Settings > Account > Privacy > Last Seen இதன்மூலம் நீங்கள் யாருக்கும் பதில்சொல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

- Advertisement -

2. No Blue Ticks : பொதுவாக மெசேஜ் சென்றால் இரண்டு கருப்பு டிக் விழும் நீங்கள் மெசஜ் படித்தால் எதிரில் இருப்பவருக்கு ப்ளூ நிற டிக் விழும். இதன்மூலம் நீங்கள் அவரது மேசேஜ்-யை படித்து விட்டீர்கள் என்று தெரியும். இதன் மூலமும் சில அசைவுகரியங்கள் ஏற்படும். இதனை நீக்கும் வழிமுறை கீழே

இதற்கான வழிமுறை : Watsapp Settings : Settings > Account > Privacy > Read Receipts.

- Advertisement -

3. Customise Chat Box : இந்த பயன்பாட்டின் மூலம் நீங்கள் அடிக்கடி தினமும் பேசும் நண்பர்களுக்கு மொபைலின் ஹோம்ஸ்க்ரீனில் தனியாக சாட் ஷார்ட்கட் வைத்துக்கொள்ள முடியும். நீங்கள் அடிக்கடி மெசேஜ் செய்யும் அந்த பயனாளியின் சாட் பகுதியினை நீண்ட க்ளிக் செய்தால் அதில் add shortcut என்ற வாசகம் வரும் காணி க்ளிக் செய்தால். சேட் ஷார்ட்கட் உங்கள் மொபைலின் ஹோம்ஸ்க்ரீனில் வரும்.

watsap

4. Highlight Text : சில முக்கிய வார்த்தைகளை மிகைப்படுத்தி பெரியதாக காண்பிக்க அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்னும் பின்னும் ஆஷ் சிம்பலை பயன்படுத்தினாலும், அண்டர்ஸ்க்கோர் சிம்பலை பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட வார்த்தையை பெரியதாகி மிகைப்படுத்தி காண்பிக்க முடியும்.

5. Custom Notification : தனிப்பட்ட முறையில் சிலரது மெசேஜ் வந்ததும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்ட இது உங்களுக்கு நிச்சயம் உதவும். நீங்கள் அவர்கள் அனுப்பும் மெசேஜ்களை பற்றிய தகவல் உடனே கிடைக்க அந்த சேட் யூசர் பெயரின் மீது லாங் கிளிக் செய்தால் அதில் சில ஆப்ஷன் வரும் அதில் நீங்கள் Custom Notification தேர்வு செய்தால் உங்களுக்கு உடனடி நோட்டிபிகேஷன் கிடைக்கும்.

- Advertisement -