கை கடிகாரம் கட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! இந்த கையில் கை கடிகாரம் கட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் நிச்சயம் பண கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.

watch
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் விலைமதிக்க முடியாதது ‘நேரம்’. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வாழ்க்கையில் எதை இழந்தாலும், எப்படியாவது கஷ்டப்பட்டு, இழந்த பொருளை மீட்டு எடுத்துவிடலாம். நேரத்தை வீணாக இழந்து விட்டோம் என்றால், அதை மீண்டும் நம்மால் பெறவே முடியாது. அந்த நேரத்தை நமக்கு காட்டுவது தான் கடிகாரம். நம்முடனே இருந்து நமக்கான நேரத்தை காட்டிக்கொண்டே இருக்கும் கை கடிகாரத்தை முறைப்படி நம்முடைய கையில் எப்படி கட்ட வேண்டும்? வலது கையில் கட்டவேண்டுமா? இடது கையில் கட்ட வேண்டுமா?  வாழ்க்கையில் இருக்கும் பொருளாதார பிரச்சனை தீர இந்த கை கடிகாரத்தை முறைப்படி எந்த கையில் எப்படி கட்ட வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

wearing watch astrology

பொதுவாகவே நம்முடைய இடது கையானது பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்க்கும் தன்மை கொண்டது. வலதுகை என்பது நம்மிடம் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால்தான் ஆசிர்வாதம் செய்யும்போது வலது கையை பயன்படுத்துகிறார்கள். பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல சக்தியை நம்மிடம் இருக்கக் கூடிய இடம் நம்முடைய இடது கை மணிக்கட்டு பகுதி. ஆக கை கடிகாரத்தை இடது கையில் கட்டுவது நல்லது.

- Advertisement -

சரி, குறிப்பாக அந்த கடிகாரத்தை நாம் எதற்காக நம்முடைய மணிக்கட்டுப் பகுதியை தொடும்படி காட்டுகின்றோம்? என்பதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நம் உடம்பில் இருக்கும் மூலாதார சக்கரம் சீராக இயங்க வேண்டும். மூலாதார சக்கரத்தை சீராக இயக்கக்கூடிய சக்தியும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் அமைந்துள்ளது. அந்த மணிக்கட்டு பகுதியில், கடிகாரத்தை கட்டும்போது அதன்மூலம் ஏற்படும் அழுத்தம், மூலாதார சக்கரம் சீராக இயங்குவதற்கு காரணமாக உள்ளது.

watch2

குறிப்பாக மணிக்கட்டு பகுதியில் கட்டப்படும் மெட்டல் வகையில் செய்யப்பட்ட கை கடிதங்களுக்கு மூலாதார சக்கரத்தை இயக்கும் ஆற்றல் அதிகமாகவே உள்ளது. நிறைய பேர் தங்கத்தினால் செய்யப்பட்ட கைக்கடிகாரத்தை தங்களுடைய கையில் அணிந்து கொள்வார்கள். தங்கம், வெள்ளி, இப்படிபட்ட உலோகங்களுக்கு மூலாதாரச் சக்கரத்தை சீராக இயக்கும் தன்மை அதிகமாக உள்ளது.

- Advertisement -

இதற்காக மற்ற உலோகங்களில் எல்லாம் கைகடிகாரம் பயன்படுத்துவது தவறு என்பது அர்த்தம் கிடையாது. அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப கை கடிகாரத்தை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, அந்த கை கடிகாரம், இடது கை மணிக்கட்டுப் பகுதியில், அமையும்படி கட்டிக் கொள்வது சிறப்பானது. (கடிகாரத்தில் நேரம் காட்டும் பகுதியை, உள்பக்கமும் கட்டிக்கொள்ளலாம். மேல் பக்கமும் கட்டிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது.)

watch3

உங்களுடைய பொருளாதார சூழ்நிலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்றால், உங்களது இடது கை மணிக்கட்டு பகுதியில் பச்சை நிற பேனாவைக் கொண்டு, ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து விட்டு, அதன் பின்பு அதன் மேல் கடிகாரத்தை கட்டிக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் வரக்கூடிய பணகஷ்டம் படிப்படியாக குறைவதற்கு இது உங்களுக்கு சிறிய உதவியாக இருக்கும். பிரபஞ்சத்தில் இருந்து நல்ல சக்தியை ஈர்ப்பதற்கு, இந்த பச்சை நிற ஸ்வஸ்திக் சின்னம் உறுதுணையாக இருக்கும்.

swasthik

மூலாதார சக்கரத்தை சரியான முறையில் இயக்க வைத்து, உங்களை சுறுசுறுப்பாக வைத்து வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை உங்களை நெருங்காமல் இருப்பதற்கு, இடது கை மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் பச்சை நிற ஸ்வஸ்திக் சின்னமும், அதன் மேல் நீங்கள் கட்டும் கைகடிகாரமும் உறுதுணையாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -