பெண்கள் புதன்கிழமை அன்று கட்டாயம் செய்ய வேண்டிய சில கடமைகள். உங்கள் வீட்டின் நன்மையும் இதில் அடங்கியுள்ளது.

puthan-vilakku

நம்முடைய வீடுகளில் நாம் செய்யும் வேலைகள் பல இருந்தாலும், சில தினங்களில், சில வேலைகளை குறிப்பிட்டு செய்துவந்தால் நமக்கு நன்மை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் புதன் கிழமை அன்று, அவரவர் வீட்டில் பெண்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால், நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அது என்னென்ன? ஏப்படி செய்வதன் மூலம் நமக்கு  நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

anjaraipetti

பொதுவாகவே, சமையல் அறையில் பெண்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் அஞ்சறை பெட்டி. இந்த அஞ்சறை பெட்டியில் வாரம் ஒருமுறை புதன்கிழமை அன்று பொருட்களை நிரப்பி வைப்பது மிகவும் நல்லது. அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் என்றுமே நிறைவாக இருக்க வேண்டும். இப்படி இருக்க அந்த பொருட்களை புதன்கிழமை அன்று அஞ்சறைப்பெட்டியில் சேமித்து வைக்கும் போது நம் வீட்டில் செல்வமும் சேரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

உங்கள் வீட்டில் புதியதாக ஏதாவது ஒரு பொருட்களை வாங்க வேண்டும் என்றால், இந்த புதன்கிழமையில் வாங்குவது நல்லது. நீங்கள் வாங்கும் அந்த பொருள் மேலும் மேலும் சேரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய துணி, நகை வீட்டிற்கு தேவையான பாத்திரம் பண்டங்கள் இவைகளை வாங்குவது சிறந்தது.

oil pulling

சமைக்க தேவைப்படும் எண்ணெயை புதன்கிழமையில் வாங்கினால் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வரும். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து வாங்க வேண்டுமென்றாலும், புதன்கிழமைகளில் வாங்கலாம். ஆனால் தயவு செய்து எண்ணெயையும், மருந்தையும் ஒன்றாக சேர்த்து வாங்காதீர்கள். ஒரு புதன் கிழமை எண்ணெய் வாங்குங்கள். அடுத்த புதன்கிழமை மருந்து வாங்குங்கள். மருந்து வாங்குவதை தள்ளிப்போட முடியாது தான். தீருவதற்கு முன்பாகவே, நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மருந்தாக இருந்தால், முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி புதன்கிழமையன்று நீங்கள் மருந்து வாங்கும் பட்சத்தில், அந்த நோய்க்கான தீர்வு, கூடிய விரைவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதுவே, தீராத நோயாக இருந்தாலும், அதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முயற்சி செய்து பாருங்கள்! நன்மை நடக்கும் என்று சொல்லி, ஒரு பரிகாரத்தை செய்யும்போது அந்த மன நிலமையானது நோயை தீர்த்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

பெண்கள் புதன்கிழமை அன்று மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளித்து கொள்ளுங்கள். இது உங்களுடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. குறிப்பாக புதன் கிழமை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது முக அழகும், அக அழகும் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். பெண்களுக்கு முக அழகு எவ்வளவு தேவையோ, அதைவிட அதிகம் தேவை, அக அழகு, அதாவது மன சுத்தம், மனத்தூய்மை, சுயநலமற்ற மனது. இதனால்தான் மேற்குறிப்பிட்டுள்ள கடமைகளை எல்லாம் பெண்கள் கையில் கொடுத்து வைத்துள்ளார்கள். மறக்காம இந்த வேலைகளை எல்லாம் புதன்கிழமை செஞ்சிருங்க! உங்க வீட்ல இருக்கிற பெரியவங்களுக்கு, மருந்தை வாங்கி வைக்கனும், அப்படின்னா, புதன்கிழமையில் வாங்கி வச்சிருங்க! உங்களோட கடமையிலிருந்து தவறக்கூடாது.

bathing

புதன்கிழமை அன்று, உங்களுக்கு திருமண நாளோ அல்லது பிறந்த நாளோ அல்லது அமாவாசையோ இதுபோன்ற குறிப்பிட்ட ஏதாவது தினங்கள் வந்தால் மட்டும் அந்த தினத்தில் எண்ணெய் வைத்து குளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். சில விஷயங்களை தொடர்ந்து நாம் செய்து வருவதன் மூலம், நம்முடைய வீடும், செழிப்பாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, இந்த விஷயங்களை கடைப்பிடித்து தான் பாருங்களேன் நிச்சயம் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்களது நிறைவேறாத ஆசையும் விரைவில் நிறைவேற, இந்த 2 பொருள் மட்டும் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Wednesday works for us. Puthan pariharam in Tamil. Puthan vazhipadu in Tamil. Wednesday in Tamil. Wednesday pariharam in Tamil.