விநாயகர் சதுர்த்தியில் எந்த ராசிக்காரர்கள் எப்படி பூஜை செய்தால் நல்லது தெரியுமா?

astro pillayar

வருடா வருடம் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளையே நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்தநாளில் பொதுவாக அனைவரும் முழு முதற் கடவுளான விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைப்பது வழக்கம். அதோடு ஒவ்வொரு ராசி காரரும் அவரகளது ராசிக்கு ஏற்றபடி கீழே குறிப்பிட்டிருப்பது போல் அபிஷேகம் செய்வது நல்ல பலன்களை தரும்.

astro vinayagar

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி கொண்டு அபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சானப்பொடி கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எலுமிச்சை சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்வில் உள்ள தும்பங்கள் அனைத்தும் விலகும்.

vinayagar

கடகம்
கடக ராசிக்காரர்கள் பச்சரிசி மாவை கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்க்கை செழுமை அடையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பஞ்சாமிருதம் கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்வில் இனிமை வந்து சேரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நார்தம் பழம் மற்றும் சாத்துக்குடி சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

Advertisement

vinayagar

 

விருச்சகம்
விருச்சக ராசிக்காரர்கள் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல பலன் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பஞ்சாமிருதம் கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பமஞ்சள் பொடி மற்றும் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.