பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரராகும் அந்த ரகசியம் என்ன?

பணத்தை சேர்த்து வைப்பது என்பதே ஒரு விதமான போதை தான். ஆரம்ப கட்ட காலத்தில் பணத்தை சேர்ப்பதில் கஷ்டம் இருந்தாலும், நீங்கள் ஒரு தொகை பணத்தை முதலில் சேர்த்து வைத்து பாருங்கள், அந்த செயலானது உங்களை மீண்டும் மீண்டும் பணத்தை சேர்க்க தூண்டிக் கொண்டே இருக்கும். அதாவது ஒரு வேலையை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும்போது, நமக்கே தெரியாமல் அதற்கு நாம் அடிமையாகி விடுவோம். உதாரணத்திற்கு சில பெண்கள் தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். தினந்தோறும் அந்த நாடகத்தைப் பார்த்து பார்த்து அவர்களால் பார்க்காமல் இருக்கவே முடியாது. சிலருக்கு பாட்டு கேட்பதில் ஆர்வம். சிலருக்கு செய்தி கேட்பதில் ஆர்வம். இதே போல் தான் பணம் சேர்க்கும் கலையும். நீங்கள் 10 ரூபாய் 10 ரூபாய் நோட்டாக சேர்த்து வைத்துக் கொண்டே இருங்கள். பிறகு அப்படி சேர்க்கும் பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். பிறகு பணம் தானாக சேர்ந்துகொள்ளும். 100 ரூபாய், 1000 ரூபாய், லட்ச ரூபாயை தான் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. 10 ரூபாயாக இருந்தாலும் அதை சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தாலே போதும். சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம். இதோடு சேர்த்து பணக்காரர்கள் தங்களது வீட்டில் செய்யும் சில ரகசிய வழிகளையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ten-rupees

முதலில் உங்களது வீட்டில் ஒரு தென்கிழக்கு மூலையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். தேவையற்ற பொருட்களை அந்த இடத்தில் வைக்கக்கூடாது. ஒரு மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலியின் மீது, கண்ணாடி குடுவை இருந்தாலும் சரி, மண் குடுவை இருந்தாலும் சரி. அதில் பாதி அளவு நீரை நிரப்பி விட்டு, சிறிதளவு கொத்தமல்லி தழைகளை போட்டு வைக்க வேண்டும். அது வாடக் கூடாது. வாடுவதற்கு முன்பு எடுத்து புதியதாக மாற்றி விட வேண்டும். மல்லி இலைகளை மாற்றும்போது தண்ணீரையும் புதிதாக மாற்றிக் கொள்ளலாம். முடிந்தவரை தண்ணீரையும் மல்லித் தழையையும் தினம்தோறும் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக வீட்டின் தென்கிழக்கு மூலையில் இரண்டு சோள குருத்துக்களை மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடுவது மிகவும் சிறப்பான ஒன்று. மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த சோளங்களை எடுத்து பறவைகளுக்கு தானியமாக போட்டுவிடலாம். மீண்டும் புதியதாக சோளத்தை வாங்கி அந்த இடத்தில் கட்டி வைப்பது நல்ல பண வரவை கொடுக்கும்.

corn-fiber

அடுத்ததாக உங்களது வீட்டு சமையலறையில் ஒரு சிறிய பாத்திரத்தில், சிறிதளவு அரிசியை போட்டு அதில் உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களது கையால் ஒரு ரூபாய் நாணயங்களை போட்டு வைக்க வேண்டும். அந்த அரிசியும், நாணயமும் இருக்கும் பாத்திரத்தை சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிடலாம். இந்த பாத்திரத்தில் உள்ள அரிசியை 6 மாதத்திற்கு ஒரு முறை பறவைகளுக்கு உணவாக அளித்து விட்டு, அதிலிருக்கும் நாணயங்களை ஏதாவது செலவிற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மீண்டும் புதியதாக அரிசியையும், நாணயத்தையும் அதில் நிரப்பி வைத்துக் கொள்வது நல்லது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நம் வீட்டில் தனத்தோடு சேர்த்து தானிய லட்சுமியும் மகிழ்ச்சியோடு இருக்கும்.

- Advertisement -

kungumam

ஒரு வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டில் இருக்கும் சிகப்பு குங்குமத்தை உங்கள் கை விரல்களால் தொட்டு ஒரு வெள்ளைக் காகிதத்தில் லாபம் என்று எழுதி, அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். ஆனால் அந்த காகிதம் எப்போதும் உங்கள் கண்களுக்கு தெரியும் படி இருக்க வேண்டும். அதாவது காலையில் நீங்கள் வேலைக்குக் கிளம்பும்போது அல்லது தொழில் தொடங்க கிளம்பும் போதோ தினம்தோறும் இதை பார்த்து விட்டு சென்றால் அதிகப்படியான நன்மை நடக்கும்.

இந்த பரிகாரங்கள் எல்லாம் வடமாநிலத்தவர்கள் பின்பற்றி வரக்கூடியது தான். பொதுவாகவே மார்வாடிகள் என்றால் அதிக வசதி படைத்தவர்களாக இருப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லை. நன்மை நடக்கும் என்று நம்பி பரிகாரத்தை செய்து தான் பார்ப்போமே.

இதையும் படிக்கலாமே
தங்க நகை அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்க பணக்காரர்கள் பின்பற்றும் ரகசிய பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Selvam peruga thanthram Tamil. Selvam peruga tips Tamil. Selvam sera enna seiya vendum. Selvam sera tips tamil.