பழைய சுவாமி விக்ரகங்கள், எந்திரங்கள், பூஜை பொருட்கள் வைத்திருந்தால் தெரியாமல் கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

vikragam-at-home

நம் பரம்பரையில் சில முக்கிய பொருட்களை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள், அதை அடுத்தடுத்த சந்ததியினர் பராமரித்து வருவார்கள். அவ்வரிசையில் பழைய சுவாமி விக்ரகங்கள், எந்திரங்கள், பூஜை பொருட்களும் அடங்கும். இந்த பொருட்களை ஒரு கட்டத்திற்கு மேல் நம்மால் பராமரிக்க முடியாவிட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு. தொடர்ந்து படியுங்கள்!

vikragam1

பொதுவாகவே பரம்பரை சொத்துக்களில் அவர்களுடைய சந்ததியினருக்கும் பங்கு உண்டு. அதே போல அவர்களுடைய பூஜை சார்ந்த பொருட்களும், அவர்களுடைய சந்ததியினர் மட்டுமே பராமரித்து வர வேண்டும். அதனை மற்றவர்கள், ரத்த சம்பந்தமில்லாதவர்கள் பராமரிப்பது என்பது கட்டாயம் நல்லதல்ல. இதனால் தெய்வ குற்றமும், தோஷமும் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.

நாம் நம்முடைய வீட்டில் பூஜைக்காக பயன்படுத்தும் தெய்வ விக்கிரகங்கள் மிகவும் அனுஷ்டானம் ஆக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அளவிற்கு மேல் தெய்வ விக்கிரகங்கள் வாங்க கூடாது என்கிற நியதியும் உண்டு. சிறிய அளவிலான விக்கிரகங்களை வைத்திருப்பது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் நீங்கள் பெரிய அளவிலான விக்கிரகங்களை வைத்திருக்கும் பொழுது கட்டாயம் அதற்குரிய பூஜைகளையும் முறையாக செய்ய வேண்டும்.

vikragam

தெய்வ விக்கிரகங்களை தூசி படிய விட்டு, அபிஷேகங்கள் செய்யாமல் இருந்தால் அந்த வீட்டில் தரித்திரம் உண்டாகும். லட்சுமி கடாட்சம் போய்விடும் என்பதும் உண்டு. எனவே தெய்வ விக்கிரகங்களை வைத்திருப்பவர்கள் அதனை ஆசார அனுஷ்டானதோடு வைத்திருக்க வேண்டும். இத்தகைய தெய்வ விக்கிரகங்களை உங்களுடைய சந்ததியினரால் பராமரிக்க முடியாவிட்டால் அவற்றை கோவில்களுக்கு தானமாக கொடுத்து விடலாம். அல்லது கோவில் மடங்களுக்கு தானம் கொடுக்கலாம்.

- Advertisement -

இவற்றில் எதுவுமே செய்யாவிட்டாலும் கடலில் போட்டு விடலாம். இந்த பிரபஞ்சத்தில் வாழும் அத்தனை உயிர்களும் இறுதியாக சேருமிடம் கடல் தான். எனவே அந்த சமுத்திரத்தில் போட்டு விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. தெய்வ எந்திரங்களை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள் அதனைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். அப்படியே விட்டு விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளும் சந்திக்க வேண்டியிருக்கும்.

Yantram

தெய்வ எந்திரங்கள் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடியவை! அவற்றை பராமரிக்க முடியாதவர்கள் கடலில் போடுவது சாலச் சிறந்தது. இல்லாவிட்டால் அருகில் இருக்கும் கோவில்களில் வைத்து விடலாம். பழைய உடைந்த சுவாமி படங்களையும் இவ்வாறு கோவில்களில் வைத்து விடுவது சிறந்தது. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள் உடைந்து இருந்தாலோ, சேதமடைந்து இருந்தாலும் அதனை வீட்டில் வைத்திருக்க கூடாது. இவ்வாறு கோவில்களில் கொண்டு போய் வைத்து விட வேண்டும்.

komathi-sakaram

பூஜைப் பொருட்களில் நிறைய விஷயங்களை நாம் பயன்படுத்தி இருப்போம். சாளக்கிராமம், கோமதி சக்கரம், பானலிங்கம், ஸ்ரீ சக்கரம், வலம்புரி சங்கு, மஹாமேரு போன்ற பொருட்களை எப்பொழுதும் பயன்படுத்தாமல் போட்டு வைப்பது மிகவும் தவறு. இப்பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது மிகவும் பலன் தரக்கூடியது. அப்படி உங்களால் பராமரிக்க முடியாத பட்சத்தில் அவற்றை கோவில்களிலோ அல்லது கடலிலோ சேர்த்து விடுவது நலன் தரும் செயலாகும். அவற்றை விடுத்து ரத்த சம்பந்தமில்லாத மற்றவர்களுக்கு தானம் கொடுப்பது அல்லது அனாவசியமாக பரண் மேல் போட்டு வைப்பதோ செய்யக்கூடாது. இவற்றை செய்யும் பொழுது வீட்டில் நிச்சயம் தரித்திரம் ஏற்படும்.