பொலிவாக இருந்த முகம், திடீரென்று பொலிவிழுந்து விட்டதா? காலையில் எழுந்ததும், இதில் கண்விழித்தால் முகம் மீண்டும் பொலிவாக மாறும்.

wake-up

காலையில் கண் விழித்ததும் நாம் பார்க்கும் முதல் விஷயமானது, அன்றைய நாள் முழுவதும் நம் நினைவில் இருந்து கொண்டே இருக்கும் என்று சொன்னால் அது பொய்யாகாது. அதாவது, எந்த பொருளை கண் விழிக்கும்போது பார்க்கின்றோமோ, அந்தப் பொருள் நம் மனதில் பதிந்துவிடும். அந்தப் பொருளைப் பற்றிய நினைப்பும், அதன் மூலம் ஏற்படக்கூடிய தாக்கமும், அந்த நாள் முழுவதும் நம் நினைவலைகளில் இருந்து கொண்டே இருக்கும்.

thorana-ganapathy1

இதனால்தான் தெய்வத் திரு உருவங்களின் படம் அல்லது மனதிற்கு நிறைவைத் தரும் இயற்கை காட்சி, குழந்தையின் முகம், கோமாதா, லட்சுமிதேவி இப்படி நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் விஷயங்களில் கண் விழித்தால் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். காலையில் எழுந்திருக்கும் போதே நல்ல மனநிலையில் கண் விழித்தால் அந்த நாள் முழுவதும் நன்றாகப் போகும். எழுந்திருக்கும்போது குழப்பமான மன நிலையோடு இருந்திருந்தால், அந்த நாள் முழுவதும் வீணாகிவிடும் என்பது தான் உண்மை.

இந்த வரிசையில் நம் வீட்டில் உள்ளவர்களின் முகத்தில் கூட முழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நம் குழந்தையின் முகத்திலோ அல்லது நம் கணவரின் முகத்திலோ, நம் தாய் தந்தையரின் முகத்திலோ விழித்தாலும் சிலருக்கு அது ராசியாக இருக்கும். சிலபேர் உள்ளங்கைகளில் கண்விழித்தால் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால், உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாலும், இரண்டு உள்ளங்கைகளையும் முதலில் பார்ப்பார்கள். இதுவும் நல்லதுதான். சிலபேருக்கு வலது கையை முதலில் பார்க்க வேண்டுமா அல்லது இடது கையை முதலில் பார்க்க வேண்டுமா? என்ற சந்தேகமும் உள்ளது. இரண்டு கையையும் பார்க்கலாம்.

hand

பொதுவாக மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்களில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது நம் சாஸ்திரம் ஆக இருந்தாலும், நம்முடைய முகம் பொலிவாகவும் அழகாகவும் மாறுவதற்கு எந்த பொருளில் கண்விழிக்க வேண்டும்? எந்த பொருளை முதலில் பார்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதற்காக கண்களை மூடிக் கொண்டே எழுந்து, கண்களை மூடிக் கொண்டே நடந்து சென்று எதிலாவது மோதி விழுந்து விட வேண்டாம். சரி. அந்த பொருள் என்ன என்பதை இப்போது பார்த்துவிடலாம்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் நாம் கண் விழிக்க வேண்டிய அந்தப் பொருள், நம் முகத்தை பொலிவாக மாற்றக்கூடிய அந்த பொருள் முகம் பார்க்கும் கண்ணாடி. முகம் பார்க்கும் கண்ணாடி நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும் என்பது உண்மை. நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை உள்ளிழுத்துக் கொண்டு எப்போதும் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி கொண்டிருக்கும். இரவு முழுவதும் எதிர்மறை ஆற்றலை உள்வாங்கிக்கொண்டு, நேர்மறை ஆற்றல்களை சேகரித்து வைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணாடியில் முதலில், உங்கள் முகத்தின் பிரதிபிம்பம் விழும் போது, அதில் இருக்கும் நேர்மறை ஆற்றல் அனைத்தையும் நீங்கள் பெறும் வாய்ப்பு உள்ளது.

mirror

இதற்காக படுக்கை அறையிலேயே கண்ணாடியை வைத்துக் கொள்ளாதீர்கள். அது கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி படுக்கை அறையில் பீரோவில் கண்ணாடி இருந்தாலும், கூட அதற்கு ஒரு திரை போட்டு மறைத்து விடுங்கள்.

சில பேருடைய முகம் இயற்கையாகவே கலையாக இருந்திருக்கும். பொலிவாக இருக்கும். சமீபகாலமாக அந்த பொலிவை அவர்கள் இழந்திருப்பார்கள். பார்ப்பவர்கள் எல்லாம் கூட கேட்கும் அளவிற்கு முகம் பொலிவிழந்து, மூதேவி அடைந்தது போலிருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? ஏதாவது எதிர்மறை ஆற்றல் உங்களை தாக்கி இருக்கலாம். கண் திருஷ்டியின் மூலம் கூட முகம் பொலிவிழக்கலாம்.

mirror kannaadi

இப்படி உங்களுடைய முகம் பொலிவிழந்து இருக்கும்பட்சத்தில் அதை சரி செய்து கொள்ள, தினம்தோறும் காலை கண்விழித்ததும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து வாருங்கள். கட்டாயம் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் மீண்டும் பொலிவு பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்கலாமே
இவையெல்லாம் உங்கள் கனவில் வந்தால், லக் அடிக்கப் போகுதுன்னு அர்த்தம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have What to do first in morning. Wake up and do it. What to do when first wake up. What to do first thing in the morning.