எப்போதும் போல இல்லாமல், ஒரு முறை கோதுமை தோசையை இப்படி செய்து பாருங்கள். கோதுமை தோசையே பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட இன்னும் 2 தோசையை கேட்டு விருப்பமாக சாப்பிடுவார்கள்.

wdosai
- Advertisement -

எப்போது பார்த்தாலும் இந்த கோதுமை தோசையை சாப்பிடுவதா? சாப்பிடுவதற்கே பிடிக்கவில்லை! என்று அலுத்துக் கொள்பவர்கள் கூட, இப்படி கோதுமை தோசை சுட்டுக் கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த கோதுமை தோசையில். கொஞ்சம் மசாலா பொருட்களை வதக்கி அரைத்து, கோதுமை மாவோடு சேர்த்து தோசை சுட போகின்றோம். வாங்க அந்த ரெசிபியை மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சுக்கோங்க. இந்த டிப்ஸ் தெரிந்தால் உங்க வீட்ல நீங்க தான் கோதுமை தோசை செய்வதில் பெஸ்ட் குக்.

wheat-flour

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சை  மிளகாய் – 2, தோல் உரித்த பூண்டு பல் – 6 லிருந்து 8, இஞ்சி – 1/2 இன்ச், சேர்த்து முதலில் நன்றாக வதக்கி விட வேண்டும். அதன் பின்பு பெரிய தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். மீடியம் சைஸ் தக்காளி பழமாக இருந்தால் 2 தக்காளி பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தக்காளிப் பழத்தையும் பச்சை வாடை போக வதக்கி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

- Advertisement -

இந்த விழுது நன்றாக ஆறியதும் இதை அப்படியே மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

dosai6

அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு 1 கப், அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு தேவையான அளவு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை இதில் ஊற்றி, இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, கட்டிகள் இல்லாமல் முதலில் கரைத்து விட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி தோசை மாவு பக்குவத்திற்கு சரியாக கரைத்துக் கொள்ளுங்கள். (மொத்தமாக எட்டிலிருந்து பத்து தோசை செய்யும் அளவிற்கு கோதுமை மாவைப் போட்டுக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகளை சேர்த்து, கரைத்து ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து விடுங்கள். மாவு நன்றாக ஊறியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து எப்போதும்போல தோசை வார்க்க வேண்டியது தான்.

dosai7

இந்த தோசையை மிகவும் மெல்லிசாக வார்த்து சாப்பிட முடியாது. குழி கரண்டியில் மாவை அப்படியே தோசைக்கல்லில் ஊற்றி லேசாக ஊத்தப்பத்தை விட இன்னும் கொஞ்சம் மெல்லிசா தேய்த்துக் கொடுத்து, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் இரண்டு பக்கமும் சிவக்க வைத்து பரிமாறினால் சூப்பரான கோதுமை தோசை தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இருந்தால்கூட போதும். சூப்பரா தோசை உள்ளே இறங்கி விடும். இந்த தோசை ரெசிப்பி பிடிச்சிருக்கா. இன்னைக்கு ராத்திரி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -