மஹாளய அமாவாசை இன்றா நாளையா ? எப்பொழுது தர்ப்பணம் கொடுக்கவேண்டும்?

0
1827
mahalaya-ammavasai

மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் அமாவாசைதோறும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். இயலாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாள்களில் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். முன்னோர்களான பித்ருக்களை மறக்காமல் வழிபட்டு அவர்களின் ஆசிகளைப் பெற்றால்தான், நமக்கும் நம் சந்ததியினருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்கிறது சாஸ்திரம்.

mahalaya-ammavasai

இந்த வருடம் மஹாளய அமாவாசை செப்டம்பர் 19-ம் தேதி மதியம் தொடங்கி 20-ம் தேதி மதியம் வரை இருப்பதால் என்றைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு குழப்பமும் கவலையும் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கம் அறிய  சாஸ்திர நிபுணர் குமார சிவாச்சாரியாரை தொடர்புகொண்டு கேட்டோம்.

“இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்த மஹாளய அமாவாசை தொடங்குவதால், பஞ்சாங்க விதிப்படி அப்போது தர்ப்பணம் அளிக்கக் கூடாது. 12 மணிக்கு மேல் தர்ப்பணம் கொடுக்க சாஸ்திர அனுமதி இல்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால் மறுநாள் 20-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.32 மணி அளவில் தொடங்கி மதியம் 12 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் அளிக்கலாம்.

mahalaya-ammavasai

சூரிய உதயத்துக்குப் பின்னர் எத்தனை சீக்கிரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்த தர்ப்பணம் நல்லது. இதுதான் பஞ்சாங்கம் கூறும் விதி. மற்றபடி இன்று மதியத்துக்கு மேல் தர்ப்பணம் செய்வது என்பது அவரவர் விருப்பம்.

mahalaya-ammavasai

குடும்பத்தினர் இணைந்து தர்ப்பணம் செய்வதே உகந்தது. ஆண்களுக்கு பெண்கள் உதவி செய்வது அவசியம். அது பித்ருக்களை மகிழ்விக்கும். பசுக்களுக்கு அகத்திக் கீரையும், வாழைப்பழங்களும் அளிக்கலாம். காகத்துக்கு உணவிட்ட பிறகே உண்ணவேண்டும் என்பதும் இந்நாளின் விதி.