உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கக் கூடாத இடம் எது? அப்படியிருந்தால் நடக்கப்போகும் விபரீதத்தை யாராலும் தடுக்க முடியாது!

sevvai

செவ்வாய் கிரகம் என்பது ஒரு நெருப்புக் கோள் ஆகும். செவ்வாய் என்பது ஜாதக தாரர்களுக்கு நன்மைகளை செய்யும் கோள் என்றாலும் ஒரு சிலருக்கு அது இருக்கும் இடத்தை பொறுத்து தீமைகளையும் செய்யும். செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய தீமைகள் விபரீத விளைவுகளை உண்டு செய்பவையாக இருக்கும். அந்த வகையில் ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எங்கு இருப்பது? ஆபத்தான பலன்களைக் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sevvai

செவ்வாய் பகவான் உச்சம் பெற்று இருக்கும் பொழுதும், நீசம் பெற்று இருக்கும் பொழுதும் அவருக்குரிய வழிபாட்டை செய்து விட்டால் ஜாதகக்காரர்கள் தப்பித்துவிடலாம். செவ்வாயால் ஏற்படும் தோஷம், அதே செவ்வாய் தோஷத்தால் முறியடித்து விடலாம். இதுபோல செவ்வாயால் வரக்கூடிய பிரச்சனைகளை பற்றி தான் தெரிந்து கொள்ள இருக்கிறோம். செவ்வாயால் கிடைக்கக்கூடிய நன்மைகளை விட, அது செய்யும் தீமைகள் மனிதனை நிலைகுலைய செய்துவிடும். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் அமைந்து விட்டால் அவருடைய வாழ்நாளில் ஒருமுறையாவது உடலில் வெட்டுக் காயத்தை வாங்கிக் கொள்வான். அது எப்போது நடக்கும் எல்லாம் தெரியாது! ஆனால் கண்டிப்பாக நடந்தே தீரும்.

மேலும் லக்னத்தில் செவ்வாய் இருப்பது மிகவும் மோசமான பலன்களை கொடுக்கும். தீராத நோய் தாக்கம், பெற்றோர்கள் இடத்தில் அன்பு இல்லாமல் இருக்கும். மேலும் ஒருவிதமான பயத்துடனும், சுய நலத்துடனும் இருப்பார்கள். நெருப்பினால் ஆபத்து ஏற்படலாம். தலையில் காயம் ஏற்படும். கண்பார்வை பாதிப்புகள் உண்டாகும். தற்பெருமை கொண்டு மற்றவர்களுடைய வெறுப்பிற்கு ஆளாவார்கள்.

sevvai

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் 2ல் இருந்தால் ‘தவளை தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி உங்களுக்கு தான் பொருந்தும். எங்கு எதை பேச வேண்டும்? என்கிற அறிவு இல்லாமல், எதையாவது பேசி வசமாக மாட்டிக் கொண்டு தவிப்பீர்கள். உங்கள் வாய் தான் உங்களுக்கு எதிரியாக மாறும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் உண்டாகும். எதையும் மனதில் போட்டு வைத்துக்கொள்ள தெரியாமல் வெளிப்படையாக பேசுவதால் பல இடங்களில் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். சிக்கனமாக இல்லாமல் ஊதாரியாக செலவு செய்து வறுமையை உண்டாக்கி கொள்வீர்கள்.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மூன்றில் இருந்தால் கூடப் பிறந்தவர்களே பிரச்சனைகளை கொடுப்பார்கள். நாலில் செவ்வாய் அமைந்திருந்தால் உடல் ஆரோக்கியம், இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தாயுடைய சாபத்தை வாங்கிக் கொள்வீர்கள். இதயம் தொடர்பான நோய்களும், வாகன விபத்தும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உறவினர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள். கல்வியில் மந்தநிலை இருக்கும். செல்வ செழிப்பு உடையவர்களாக இருந்தாலும் நிம்மதி கெடும்.

sevvai

ஜாதகத்தில் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருந்தால் சந்ததிகள் உருவாவதில் பிரச்சனை நீடிக்கும். ஆறாம் இடத்தில் இருந்தால் பகைவர்கள் தொல்லை அதிகமாக இருக்கும். மேலும் ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். ஏழாமிடத்தில் இருந்தால் திருமண பந்தத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறுக்கு வழி பாதையில் புத்தி சென்று வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்வீர்கள். எட்டாமிடத்தில் இருந்தால் ஆயுட்காலம் குறையும். அந்தரங்க நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுவீர்கள். திருமணத்தில் நிம்மதி என்பது இருக்காது. பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் விவாகரத்து நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். இல்லற வாழ்வில் மகிழ்வு இருக்காது.