வீட்டில் திருவிளக்கேற்றிய பின் எந்த திசை நோக்கி வழிபட வேண்டும் தெரியுமா ?

vilakku

இந்து மதத்தை சார்ந்து ஒவ்வொருவரின் வீட்டிலும் திருவிளக்கு இருக்கும். திருவிளக்கில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு அதற்கு பொட்டு, பூ போன்றவை வைப்பது வழக்கம். திருவிளக்கில் முறையாக எத்தனை பொட்டுக்கள் வைக்க வேண்டும் ? விளக்கை எந்த தோசையில் ஏற்ற வேண்டும்? நாம் எப்படி வழிபடவேண்டும் ? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

vilaku

திருவிளக்கில் மொத்தம் 8 பொட்டுக்கள் வைக்க வேண்டும்.விளக்கின் உச்சியில் ஒரு பொட்டும், பாதத்தில் ஒரு பொட்டும் ஐந்து முகங்களில் ஐந்து பொட்டும், தீபஸ்தம்பத்தில் ஒரு பொட்டும் என மொத்தம் 8 பொட்டுக்கள் வைக்க வேண்டும்.

நாம் வழிபடும் திருவிளக்கை எப்போதும் கீழே வைக்க கூடாது. தாம்பாளத்திலோ அல்லது ஒரு பலகையின் மீதோ திருவிளக்கை வைப்பதே சிறந்தது. அதே போல திருவிளக்கில் எந்த சேதமும் இருக்க கூடாது. உடைந்த விளக்குகள் பூஜைக்கு உகந்தது அல்ல. எவர் சில்வர் விளக்குகளையும் பூஜைக்கு பயன்படுத்த கூடாது.

vilaku

திருவிளக்கில் தீபம் ஏற்றுகையில் அஷ்ட லட்சுமிகளையும் மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அஷ்ட லட்சுமிகளில் அருள் பெற்று வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும்.

vilakku

இதையும் படிக்கலாமே:
விளக்கு தானாக நின்றுவிட்டால் கெட்ட சகுனமா ?

திருவிளைக்கை தெற்கு திசையில் ஏற்றக்கூடாது. எப்போதும் விளக்கிற்கு வலது புறமாக அமர்ந்து வழிபடுவது சிறந்தது. உதாரணத்திற்கு திருவிளக்கு கிழக்கு திசை நோக்கி ஏற்றப்பட்டிருந்தால் நாம் வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது நல்லது. பௌர்ணமி அல்லது அம்மாவாசை நாட்களில் வீட்டில் திருவிளக்கு வழிபாடு செய்வது நல்ல பலன்களை தரும்.