எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் வாழ்வில் முன்னேறலாம் ?

astrology-vinayagar
- Advertisement -

one

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: சூரியன், சிவபெருமான்

பொது பலன்:
இவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த நாட்டுக்குச் சென்றாலும் முக்கியமான இடத்தைப் பெற்றுத் திகழ்வர். வேலை செய்யும் அலுவலகத்தில் இவர்களே முதன்மையான இடத்தைப் பெற்றிருப்பதையும், அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக இருப்பதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.

- Advertisement -

two

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: பாலசந்திர கணபதி, சிவபெருமான்

பொது பலன்:
இந்த எண்ணில் பிறந்தவர்களை பற்றி பொது ஜனங்கள் பேசிய வண்ணம் இருப்பார்கள். ஜாதகத்தில் சந்திரன் சுப பலம் பெற்று இருந்தால் நல்லவிதமாகவும் சந்திரனின் ஆதிக்கம் குறைந்து காணப்பட்டால் மாறாகவும் பேசப்படுவார்கள்.

- Advertisement -

three

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தி

பொது பலன்:
இந்த எண்ணுக்கு உரிய நாட்களில் பிறப்பவர்களில் பெரும்பாலோர் தலைவர்களாகப் பொது வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். தேச முன்னேற்றத்தில் ஆர்வம் உடையவர்களும், பெரிய ஸ்தாபனங்களின் தலைவர்களும் இவ்வெண் குறிக்கும் தேதிகளில் பிறந்தவர்களாகக் காணப்படுவர். இன்னும் சில அன்பர்கள், வங்கிப் பணியாளர்களாகவும், ஆசிரியராகவும் இருப்பார்கள்.

- Advertisement -

four

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: துர்கை

பொது பலன்:
இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலரும் வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் புகழ் பெற்றுத் திகழ்வதை அனுபவத்தில் காணமுடிகிறது. மற்றவர்களுடன் வாதம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவரே.

five

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: மகாவிஷ்ணு

வழிபடவேண்டிய தலம்: திருவரங்கம், திருவெண்காடு

பொது பலன்:
மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை இவர்களுக்கு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை சாதாரண நிலையில் ஆரம்பித்தாலும், விரைவிலேயே முக்கியப் பிரமுகராகி புகழ் பெறுவர்.

six

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: மகாலட்சுமி

வழிபடவேண்டிய தலம்: திருவரங்கம்

பொது பலன்:
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசப்படுத்தி ஆளும் திறமை கொண்டவர்கள். எப்படி மற்றவர்களை வசப்படுத்தி தான் சுகமாக வாழ்வது என்னும் கலையைப் பிறவியிலேயே கற்றவர்கள். சுக்கிரனது ஆதிக்கத்தில் பிறக்கும் இவர்கள் அதிகாரம் வகித்தல், அடக்கி ஆளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றிருப்பார்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான வாழ்க்கை இவர்களுக்கு அமையும்.

seven

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: விநாயகர்

வழிபடவேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி

பொது பலன்:
இந்த எண்ணைச் சேர்ந்த அன்பர்களுக்கு இயல்பிலேயே தெய்வ பக்தியும், ஆன்மிகத்தில் நாட்டமும் இருக்கும். ஆனாலும், இவர்கள் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் தவறான சேர்க்கையால் பெயரைக் கெடுத்துக்கொள்ளவும்கூடும்.

eight

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: ஆஞ்சநேயர்

வழிபடவேண்டிய தலம்: சுசீந்திரம், நாமக்கல்

பொது பலன்:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் கடுமையாக உழைப்பார்கள். இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறார்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுவார்கள். பொதுவாக இந்த எண்ணை அதிர்ஷ்டம் இல்லாத எண் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலர் சமூகத்தில் உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

nine

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டியும் தெய்வம்: முருகப்பெருமான்

வழிபடவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன்கோவில்

பொது பலன்:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, கோபம் அதிகம் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆள நினைத்து அதில் வெற்றியும் காண்பார்கள். இவர்களில் பலரும் காவல், ராணுவம் போன்ற துறைகளில் சாதனைகள் புரிந்து புகழ் அடைவார்கள். சாதனைகளைச் செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

 

- Advertisement -
SOURCEvikatan