எந்த கிழமையில் எதை செய்தால் வெற்றி நிச்சயம் தெரியுமா ?

murugan

மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வில் வெற்றியடைய வேண்டும், செல்வம் சேர்க்க வேண்டும் என்று பல ஆசைகள் இருக்கும். இந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. முக்கியமான செயல்களை செய்யும் முன்பு அதற்குரிய நாட்களை தேர்வு செய்து அந்த நாளில் அதை செய்யவேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் எந்த நாளில் என்ன செய்தால் வெற்றி நிச்சயம் என்று பார்ப்போம் வாருங்கள்.

calendar

.ஞாயிற்றுக்கிழமை:

புதிய பதவியை ஏற்பது, புதிதாக வாகனங்கள் வாங்குவது, வீட்டில் ஹோமம் வளர்ப்பது, கிரகப்பிரவேசம் செய்வது, விவசாயிகள் புதிய விதை விதைப்பது, சுப காரியம் தொடங்குவது போன்ற செயல்களை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வது சிறந்தது. இந்த நாளில் சூரிய பகவானை வணங்கிவிட்டு செயல்களை துவங்குவது மேலும் நன்மை தரும்.

திங்கட்கிழமை:

மாங்கல்யத்திற்குப் பொன் உருகுவது, விவசாயிகள் கிணறு வெட்ட ஆரமிப்பது, வர்த்தகம் ஆரமிப்பது போன்றவற்றை திங்கட்கிழமைகளில் செய்வது சிறந்தது. இந்த நாளில் சிவபெருமானையும், ஸ்ரீமகாலஷ்மியையும் வணங்கிவிட்டு செயல்களை துவங்குவது மேலும் நன்மை தரும்.

- Advertisement -

calendar

செவ்வாய்கிழமை:

வீர சாகச கலையை பழக ஆரமிப்பது, வாகனங்களுக்கு பூஜை போடுவது, புதிய வழக்கு தொடங்க ஆரமிப்பது போன்றவற்றை செவ்வாய்கிழமைகளில் செய்வது சிறந்தது. இந்த நாளில் முருகப்பெருமானையும்,சக்திதேவியையும் வணங்கிவிட்டு செயல்களை துவங்குவது மேலும் நன்மை தரும்.

புதன் கிழமை:

புதிய வாகனங்களை ஓட்ட ஆரமிப்பது, புதிய கல்வி கற்க தொடங்குவது, மாங்கல்யம் செய்ய ஆரமிப்பது போன்றவற்றை புதன் கிழமைகளில் செய்வது சிறந்தது. இந்த நாளில் மகா விஷ்ணுவை வணங்கிவிட்டு செயல்களை துவங்குவது மேலும் நன்மை தரும்.

வியாழக்கிழமை:

குழந்தைகளுக்கு பெயர் சுட்டுவது, வீட்டிற்கு புதிதாக கடவுள் படங்கள் வாங்குவது, வீட்டில் போர் போடுவது, புதிதாக தியானம் பழகுவது, வேதம் கற்றிடத் தொடங்குவது போன்றவற்றை வியாழக்கிழமைகளில் செய்வது சிறந்தது. இந்த நாளில் மகான்களையும், தேவர்களையும் வணங்கிவிட்டு செயல்களை துவங்குவது மேலும் நன்மை தரும்.

calendar

வெள்ளிக்கிழமை:

குழந்தையைத் தொட்டிலில் போடுவது, குழந்தைக்கு முதல் முறையாக சோறு ஊட்ட தொடங்குவது, குழந்தைக்கு காது குத்துவது, சுமங்கலி பூஜை செய்வது, வளைகாப்பு நடத்துவது போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறந்தது. இந்த நாளில் துர்காயை வணங்கிவிட்டு செயல்களை துவங்குவது மேலும் நன்மை தரும்.

சனிக்கிழமை:

வீட்டிற்கு வளர்ப்பு பிராணிகளை வாங்குவது, குருவிடம் தீட்சை வாங்குவது, இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குவது போன்றவற்றை சனிக்கிழமைகளில் செய்வது சிறந்தது. இந்த நாளில் சிவனை வணங்கிவிட்டு செயல்களை துவங்குவது மேலும் நன்மை தரும்.