வீட்டில் எந்த திசை நோக்கி அமர்ந்து பிராத்தனை செய்வது சிறந்தது தெரியுமா?

dhisail
- Advertisement -

பொதுவாக இறைவனை வணங்கும் பலர் அவரது மந்திரங்களை வீட்டில் உச்சரித்து ஜபம் செய்வது வழக்கம். ஆனால் நாம் இஷ்டப்பட்ட திசையிலெல்லாம் அமர்ந்து பிராத்தனையோ ஜெபமோ செய்வதென்பது முறை ஆகாது. எந்த திசை நோக்கி அமர்ந்து ஜபம் செய்வது சிறந்தது? எந்த திசையில் அமரக்கூடாது? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

prathanai

ஒருவருக்கு வீட்டில் ஜெபம் செய்யவேண்டும் என்ற எண்ணம் வருவதே சிறந்ததாக கருதப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதாக இருந்தாலும் சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசை நோக்கி செய்வதே சிறந்தது. ஆகையால் ஜெபம் செய்ய நினைப்போர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

sun rise

தெற்கு திசை நோக்கி அமர்ந்து ஜபம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதே போல் ஒருநாள் கிழக்கு இன்னொருநாள் மேற்கு மற்றொருநாள் வடக்கு என மனம் போன போக்கில் ஏதோ ஒரு திசையில் அமர்ந்து ஜபம் செய்யக்கூடாது.

prathanai

ஓர் இடத்தில் தெற்கை மட்டும்தான் பார்க்க முடியும். மற்ற திசைகளைப் பார்த்து உட்கார வாய்ப்பே இல்லை என்றால், தெற்கைப் பார்த்து அமர்ந்து ஜபம் செய்தாலும் தவறில்லை.

- Advertisement -